Categories: Cinema News latest news

ரஜினி விஜய் ரெண்டு பேரையும் வச்சி!.. நெல்சனுக்கு வந்த விபரீத ஆசை!. வொர்க் அவுட் ஆகுமா?!..

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய படம் பீஸ்ட். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், படம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என் கட்டாயத்தில் நெல்சன் இருந்தார்.

இதையும் படிங்க- ‘ஜெய்லர்’ ஆரம்பத்தில் இருந்து ரிலீஸ் வரைக்கும் விஜய் இததான் சொன்னாரு! முதல் முறையாக நெல்சன் ஓப்பன் டாக்

அதேபோல இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படம் வெளியான பிறகு நெல்சன் கொடுத்த சமீபத்திய பேட்டியில் எனக்கு ரஜினியையும், விஜயையும் சேர்த்து ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஜெயிலர் படம் எடுக்கும் போது தோன்றியது. எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும்.

இருவருடனும் பணியாற்றியுள்ளதால், இது போன்ற எண்ணம் எனக்கு வந்தது. ஒரே படத்தில் இவர்கள் இருவரும் நடித்தால், நன்றாக இருக்கும். ஆனால் அதில் பல சிக்கல்கள் உள்ளது. அதற்கேற்ற கதை அமையவேண்டும். இவருவரும் சம்மதிக்க வேண்டும். இவருவருக்கும் டேட்ஸ் இருக்க வேண்டும்.

அது நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அப்படி நடந்தால், நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். ஜெயிலர் படம் பார்த்துவிட்டு, விஜய் அழைத்து வாழ்த்து சொன்னார் என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருவதும், ரஜினி ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் விழாவில், காக்கா கழுகு கதை சொன்னதும், பெரும் சர்ச்சையானது. இந்த சமயத்தில், ரஜினியையும், விஜயையும் வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்று நெல்சன் தனது ஆசையை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க- பாலய்யாவுக்கும் ஜெயிலர்ல சீன் வச்சிருந்த நெல்சன்.. இது ரஜினி படமா!.. இல்லை நண்பர்கள் மாநாடா?..

Published by
prabhanjani