கோட் படம் விஜயிற்காக எழுதியது இல்லை.. இந்த நடிகருக்குதான் எழுதியதாம்…

Published on: August 29, 2024
---Advertisement---

GoatMovie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தினை வெங்கட் பிரபு முதலில் எழுதவில்லையாம். விஜய் இந்த படத்தில் எண்ட்ரி கொடுத்த ஆச்சரிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

 வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். விஜய், பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைக் மோகன் முதல்முறையாக வில்லன் வேடம் ஏற்று இருக்கிறார்.

இதையும் படிங்க: வாழைப் படத்தின் கதையை முதலில் சொன்னது நான்தான்… யார்றா அது புதுசா இருக்கு..?

இப்படம் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. டிக்கெட் ரிலீஸ் 31ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குறைவாகவே இருக்குமென படக்குழு முடிவெடுத்துள்ளது.

venkat prabhu

இந்நிலையில் வெங்கட் பிரபு கூறும்போது, கோட் திரைப்படத்தின் கதையை முதலில் விஜயிற்கு எழுதவில்லை. இன்னொரு மூத்த நடிகர் மற்றும் இளம்நடிகரை வைத்து தான் இக்கதையை எழுதினேன். கோவிட் நேரத்தில் இரண்டு நாயகர்களை வைத்து உருவாக்கிய இப்படத்தை குறித்து பேச்சு வார்த்தையில் தான் ஜெமினி மேன் படத்தில் ஆன்ட்டி ஏஜிங் டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஓகே சொல்லாமலா வர்றாங்க! சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை தெரியுமா? பொங்கிய ஷகீலா

ஏன் அதை நாமும் இப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என நாங்கள் ஆராய்ச்சி செய்த போது அது சாத்தியம் என்பது தெரிந்தது. இதனால் தான் அனைவரும் இது ஜெமினிமேனின் ரீமேக்காக இருக்கும் என கிசுகிசுத்தனர். அதைத்தொடர்ந்து விஜயை இரண்டு கேரக்டரில் கொண்டுவர முடிவெடுத்தேன். வாரிசு படத்தில் இதன் ஓன்லைன் மட்டுமே சொன்னேன்.

லியோ சூட்டிங்கில் தான் போய் மொத்த கதையும் சொன்னேன். அது விஜய் சாரை ரொம்பவே கவர்ந்தது. இதைத் தொடர்ந்து கோட் திரைப்படம் தற்போது உருவாகி இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். கோட் திரைப்படத்தின் பட குழு கலந்து கொள்ள இருந்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடக்க இருந்த நிலையில் அது தள்ளிப் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.