Idli kadai: இட்லி கடை ரிலீஸ் தேதிக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?!.. செம மேட்டரா இருக்கே!..

by sankaran v |   ( Updated:2025-04-06 22:39:34  )
ajith, dhanush
X

ajith, dhanush

தனுஷ் தயாரித்து இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் முதலில் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அப்போது அஜீத்தின் குட் பேட் அக்லி வருவதால் படத்தை அக்டோபர் 1க்குத் தள்ளி வைத்து விட்டார்கள். ரஜினியின் கூலி படம் ஆகஸ்டு 14ல் வெளியாகிறது. ஏப்ரல் 10ல் வர வேண்டிய இட்லி கடை படம் அக்டோபர் 1 வரை தள்ளிப் போவதன் காரணம் என்ன?

கொஞ்ம் சீக்கிரமாகவே விட்டுருக்கலாமேன்னு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வர்றாங்க. ஆனால் உண்மையான காரணம் என்னன்னு இப்ப பார்க்கலாம். படம் எந்த மாதிரியான கதைகளமாக இருக்கும்? கிராமம், சென்டிமென்ட், ஆக்ஷன்னு எல்லாமே பக்காவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸால இட்லி கடை படத்தோட ரிலீஸ் தேதி தள்ளிப் போகும்னு பார்த்தோம். ஆனா அது இவ்ளோ காலதாமதமாகி அக்டோபர் வரை ரிலீஸ் தள்ளிப் போறதுக்கான காரணம் என்ன என்று ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். இட்லி கடை படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாததுக்குக் காரணம் இதுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

idli kadaiஇட்லி கடை அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது ராயன் படம் மாதிரி ஆக்ஷன் காட்சிகளோடு இருக்குமா? அல்லது திருச்சிற்றம்பலம் மாதிரி பேமிலி படமா இருக்குமா? என்ற கேள்விக்கு உணர்வுப்பூர்வமான காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் இணைந்த ஒரு படமாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன்.

தனுஷ் ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து இட்லி கடை படத்தை இயக்கியுள்ளார். இதில் முதல் 2 படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 3வது படம் யூத்களைக் கவர்ந்தது. இந்தப் படம் அனைவரையும் கவரும் என்றே நம்பலாம்.

Next Story