அஜித் இதை செய்தால்தான் விட்ட இடத்தை பிடிக்க முடியும் - பிரபல பத்திரிக்கையாளர் கொடுத்த அட்வைஸ்
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு பிரபலம் வாய்ந்த நடிகராகவும் இருந்து வருகிறார். இவரின் வளர்ச்சி ஒரு அபார வளர்ச்சியை எட்டியுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஆனால் அதை அஜித் பயன்படுத்துகிறாரா என்றால் இல்லைதான் என்று பிரபல பத்திரிக்கையாளர் அந்தனன் கூறினார்.
அவர் ஒரு பேட்டியில் கூறும் போது அஜித் ஒரு அதிரிபுதிரியான ஹிட்டை கொடுத்த வெகு நாள்களாகி விட்டது என்று கூறினார். கதை விஷயத்தில் அஜித் ஏனோதானோ என்றுதான் இருக்கிறார் எனவும் கூறினார். அவருக்கு வரும் கதையை அவர் தீர விசாரித்து ஆலோசித்து நடிக்கிறாரா என்றால் இல்லை என்றும் அந்தனன் கூறினார்.
மேலும் ஏதோ ஒரு கதை அப்படியே ஃபில்டர் ஆகி அஜித்திடம் வரும் போது அதை சரியாகக் கூட கேட்காமல் ஏதோ நடிக்கனும் என்ற பேருக்குத் தான் நடிக்கிறார். இதையெல்லாம் விட்டு கதை விஷயத்தில் சரியாக இருந்தால் தான் அஜித்தால் அந்த இடத்தை அடைத்த முடியும் என்று அந்தனன் கூறினார்.
மேலும் விஜய் அந்த விஷயத்தில் சரியாக இருக்கிறார் என்றும் கூறினார். ரெண்டு பேரும் ஒன்றாக ஹிட்டை கொடுத்தார்கள். இதில் விஜய் அடுத்த படத்தை முடித்து விட்டார். ஆனால் அஜித்தின் நிலைமையை பாருங்க. இன்னும் படப்பிடிப்பு கூட ஆரம்பிக்கப்பட வில்லை. என்ன தான் செய்கிறார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அஜித்தின் நிலைமை ஆகிவிட்டது.
இதையும் படிங்க : சிவாஜி – எம்.எஸ்.வி இடையே வந்த சவால்!.. வந்ததோ ஒரு சூப்பர் மெலடி!.. அட அந்த பாட்டா?!..
ஆனால் இவர்களுடன் ஒப்பிட்டி பார்க்கும் போது வயசானாலும் ரஜினியும் கமலும் 80களில் எப்படி போட்டியில் இருந்தார்களோ அதே ஒரு போட்டி இப்பொழுதும் அவர்களுக்குள் ஆரம்பமாகிவிட்டது. ரஜினி ஒரு பக்கம் தன்னுடைய 170, 171 போன்ற படங்களில் வரிசைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பக்கம் கமல் மணிரத்தினம், எச்.வினோத் போன்ற இயக்குனர்களிடம் கமிட் ஆகி அவரும் களத்தில் ரெடியாக இருக்கிறார். அஜித், விஜய் இவர்களின் போட்டியை விட ரஜினி , கமல் போட்டிதான் இப்போது சூடுபிடித்திருக்கிறது என்றும் கூறினார்.