Connect with us

Cinema News

அவன் இளையராஜா பயோபிக் எடுத்தா!.. நான் உங்கள வச்சி எடுக்கிறேன் தலைவரே!.. வைரலாகும் சிம்பு மீம்!..

இயக்குனர் பால்கி நடிகர் தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதுதொடர்பான மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இசைஞானி இளையராஜா இசை துறையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மேஸ்ட்ரோவாக ஏகப்பட்ட ரெக்கார்டுகளை 50 ஆண்டுகளாக சினிமா துறையில் நிகழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஷாக்கிங்!.. பிக் பாஸ் பிரபலம் வீட்டில் திடீரென நிகழ்ந்த பேரிழப்பு.. உடைந்து போன அக்‌ஷரா ரெட்டி!..

1970களில் தொடங்கிய இசை பயணம் 2023லும் வழி நெடுக காட்டுமல்லி என விடுதலை படம் வரை நீண்டுக் கொண்டே செல்கிறது.  இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் 25 ஆண்டுகளாக இசை துறையில் ஏகப்பட்ட சாதனைகளை அப்பாவுக்கு தப்பாகாம பிறந்த பிள்ளையாக சாதித்து வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் பால்கி நடிகர் தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை எடுக்கப் போவதாகவும் தனுஷ் தீவிர இளையராஜா ஃபேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த டெலிட் பண்ண சீனை ரிலீஸ் செய்த லியோ டீம்!.. வெற்றி விழாவுக்கு ஃபுல் மோடில் தயார் போல!..

இதை பார்த்த மீம் கிரியேட்டர்கள் ஏற்கனவே இசை என ஒரு படத்தை எஸ்.ஜே. சூர்யா எடுத்து விட்டாரே என இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் கோர்த்து விட்டு ஒரு மீம் போட, இன்னொரு மீம் அதை விட ஹைலைட்டாக நடிகர் சிம்பு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர் என்பதால் ஏ.ஆர். ரஹ்மான் பயோபிக்கில் அவர் நடிக்கப் போவதாகவும் மீம் ஒன்றை கிளப்பி வைரலாக்கி வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் பயோபிக்கில் சிம்பு நடித்தாலும் ஏகப்பட்ட ஹீரோயின்களை போடுவாரே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top