Connect with us
Kamal

Cinema News

இப்போ அதைக் கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது… கமலையே திணற வைத்த கேள்வி என்ன?

ஸ்ரீகிருஷ்ணரின் 10வது அவதாரம் கல்கி என்று சொல்வர். அவர் எடுப்பதற்குள் இங்குள்ள படைப்பாளிகள் எடுத்து விட்டார்கள். படம் சயின்ஸ் பிக்சனா, பக்தியா, புராணகால படமா என்று பார்த்தால் அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

உலக நாயகன் கமல் நடித்திருப்பதால் தமிழர்கள் மத்தியில் படம் பரவலாக பேசப்படுகிறது. அமிதாப், பிரபாஸ், தீபிகா படுகோன் என பலரும் நடித்துள்ளனர். படம் வெளியான சமயத்தில் கமல் என்ன சொன்னார்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… எல்லா சைடும் விழுந்த அடி!.. உடனடியாக வெங்கல் ராவுக்காக வடிவேலு செய்த செயல்.. என்ன தெரியுமா?..

உலக என்டர்டெயின்மென்டை நோக்கி இந்திய சினிமா நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு பல அடையாளங்கள் சமீப காலமாக வந்து கொண்டு இருக்கின்றன.

அவற்றில் ஒன்று நாக் அஸ்வினின் கல்கி. ஆயுதங்கள் கையால் செய்தவையாக இருந்தாலும் அவற்றின் வலிமை உலகம் முழுவதும் பேசப்படும். சயின்ஸ் பிக்சன், மித்தாலஜி இரண்டையும் கலந்து சுவாரசியமாக எடுத்துள்ளார்கள்.

அமித்ஜியை எல்லாம் எந்தப் பட்டியலில் சேர்க்கிறது? இளம் நடிகர்களா? பழம் நடிகர்களான்னு குழப்பம் வருகிறது. அவ்வளவு பிரமாதமா பண்ணியிருக்காங்க. இதுல டூயட் கிடையாது. ஆனா பைட்ஸ் இருக்கு. இது குழந்தைகளை எண்ணி எடுக்கப்பட்ட படமாகத் தான் தெரியுது.

ஆடியன்ஸ்சுக்குத் தெரியாது. ஜனங்க இப்படித்தான்னு சொல்வது எல்லாம் இயலாதவர்களின் கூற்று. இதெல்லாம் புரியாது. நம்ம மக்களுக்குப் புரியாதுன்னா அதெப்படி ஜேம்ஸ்பாண்டு படத்தை எல்லாம் பார்த்துட்டு வர்றாங்க. நல்ல டெக்னிக் தமிழனுக்கு புரியாது என்பதை வந்து ஏற்றுக்கொள்ளவே முடியாது. மொழியே இல்லைன்னாலும் தமிழர்கள் நல்லா இருந்தா பார்ப்பாங்க.

நான் சின்னப்பையனா இருந்தபோது ‘செம்மீன்’னு ஒரு படம். மொழி மாற்றம் செய்யப்படல. சப்-டைட்டில் கிடையாது. நான் 2 வாட்டி பார்த்தேன். எதுக்காகப் பார்த்தேன்னு இப்போ கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது. அதே மாதிரி தான் மரோசரித்ரா. எந்த டப்பிங்கும் இல்லாமல் தெலுங்கு படமாகவே நல்லா ஓடியது. நாம தான் கலைக்கு மொழியைத் திணிக்கிறோம்.

இதையும் படிங்க… ஷங்கர் பூட்டி வைத்த ரகசியம்!.. இந்தியன் 3ல் இப்படியொரு ரோல்!.. திடீரென உளறித்தள்ளிய கமல்?

சயின்ஸ் பிக்சனையும், பக்தியையும் சேர்த்து செய்த கலவை நல்ல யுக்தியாக நான் நினைக்கிறேன். தேவையில்லாத கேள்வி கேட்கவே முடியாது. இது புனை கதைதான் என்று தைரியமாகச் சொல்லி ஆரம்பிக்கும்போது கேள்வியே கேட்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top