சிவகார்த்திகேயன் டீலில் விட்டா அடுத்து இந்த படம்தான்!.. அலார்ட் ஆன வெங்கட்பிரபு!....

by sankaran v |   ( Updated:2024-09-10 02:18:03  )
skvp
X

skvp

விஜயை வைத்து கோட் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.

வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. வெங்கட்பிரபுவின் அடுத்த படம் சிவகார்த்திகேயனை வைத்துத் தான் என சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லையாம். அவருக்குத் தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் அவரது படத்தை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் ஆகுமாம். அதுவரை கோட் எ ன்ற வெற்றிப்படத்தைக் கொடுத்து விட்டு சிவகார்த்திகேயனுக்காக ஒன்றரை வருடங்கள் காத்திருக்க மாட்டாராம். அப்படி இருந்தால் ரசிகர்கள் வெங்கட்பிரபுன்னா யாருன்னு கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிடும்.

அதனால ஒருவேளை சிவகார்த்திகேயன் நம்மை டீல்ல விட்டுட்டாருன்னா அவர் தனது கம்பெனி ஸ்கிரிப்ட் ஒன்றைக் கையில் வைத்துள்ளார். அது தான் சென்னை 28. இந்தப் படத்தோட பார்ட் 3 ஐ எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தப் படத்தை வெங்கட்பிரபு ஆரம்பித்து விடுவார் என்றே தெரிகிறது.

venkatprabhu

venkatprabhu

அவருக்குக் கிரிக்கெட் சென்மென்ட் ரொம்ப ஒர்க் அவுட்டாகுமாம். சென்னை 28 படத்தோட ரெண்டு பாகமும் ஹிட். அதன்பிறகு இப்போது வெளியான கோட் படத்திலும் கிரிக்கெட் சென்டிமென்ட். ஹிட் என்கின்றனர் வலைப்பேச்சு குழுவினர்.

வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். அந்த வகையில் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே கமர்ஷியல் கலந்த ஆக்ஷன் படங்கள் தான். சென்னை 28 படத்தை இயக்கி அசத்தினார்.

தல அஜீத்துக்கு மங்காத்தா படத்தைக் கொடுத்தார். இப்போது தளபதி விஜய்க்கு கோட் படத்தைக் கொடுத்துள்ளார். அதிலும் அஜீத்தின் அட்டகாசமான ரெபரன்ஸ்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்து விட்டார்.

Also read: எந்தப் படமும் தொடாத சாதனையை செய்த ‘கோட்’! தளபதி நீங்களா சினிமாவ விட்டு போறீங்க?

வெங்கட்பிரபு இயக்கிய கோட் படத்திற்கு முதலில் கலவையான மற்றும் நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. மியூசிக் சரியில்லை என்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் விஜய் தவிடுபொடியாக்கி விட்டார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story