சித்தார்த் பண்ண வேண்டிய படம்! அஜித் பட தோல்வி குறித்து இயக்குனர் சொன்ன சீக்ரெட்

Siddharth Ajith: சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு படம் இயக்குனர்களின் விருப்பப்படி வந்து விட்டால் அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அதே வகையில் இயக்குனர்களுக்கும் தான் ஒரு திருப்தியான படத்தை எடுத்த ஒரு மன நிறைவும் ஏற்படும். ஆனால் அது நடைபெறாத பட்சத்தில் அந்த படத்தால் ஏற்படும் விளைவு அதில் நடித்த நடிகர்களை விட அந்த படத்தை எடுத்த இயக்குனர்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி அவருடைய சினிமா கெரியரில் மிகப்பெரிய அடியை வாங்கிய திரைப்படம் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அது என்ன படம் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அஜித் நடித்த ஜி திரைப்படம் தான். ஜி படத்தை பற்றி ஏகப்பட்ட பேட்டிகளில் லிங்குசாமி அவருடைய அனுபவங்களையும் அந்த படத்தால் அவர் பட்ட கஷ்டங்களையும் பலமுறை சொல்லி இருக்கிறார்.’

இதையும் படிங்க: பெரிய படத்துக்கு நோ சொன்ன பிரபல இயக்குனரின் அப்பா… ராஜா ராணி படத்தில் அசிங்கப்படுத்திய அட்லீ…

ஆனால் சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் ஒரு வித்தியாசமான பதிலை கூறியிருக்கிறார். அதாவது அவர் எடுத்த படத்தை மொத்தமா தூக்கி விடலாம் என நினைக்கக்கூடிய படம் என்றால் எது என்ன என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜி திரைப்படத்தை கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறியது: இந்த படம் சித்தார்த் போன்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய படம் .

ஆனால் அஜித் நடித்தது தான் பெரிய தவறு. ஒரு இளமையான தோற்றத்தில் ஒரு புரட்சிகரமான இளைஞன் கதாபாத்திரத்தில் பயணிக்க கூடிய கதைக்களம் தான் ஜி திரைப்படம். அந்தப் படத்தில் நான் எதிர்பார்த்தது அஜித் உண்மையாகவே தாடி வளர்க்க வேண்டும். உடல் மெலிந்து காணப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போது அது அஜித்தால் முடியவில்லை.

இதையும் படிங்க: துணியே இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட சமந்தா… நடந்தது என்ன?

மேலும் நான் எடுத்த ஆனந்தம் ,ரன், அடுத்து ஜி திரைப்படம் எனும் போது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட அரசியல் அறிவு இருக்கும் ஒரு இளைஞனின் போராட்டம் பற்றிய கதையாக இது இருக்கும் என நினைத்து தான் எடுத்தேன். ஆனால் அதில் அஜித் நடித்தது தான் படத்தின் ரிசல்ட்டையே மாற்றி விட்டது எனக் கூறியிருக்கிறார்.

 

Related Articles

Next Story