விஜயகாந்த் சொன்ன ஐடியா.. கேட்டிருந்தால் உசுரே போயிருக்கும்.. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த சத்யராஜ்..

by Rohini |
sathya_main_cine
X

vijayakanth

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இவர்களை அடுத்து கொடி கட்டி பறந்தவர்கள் சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக். இவர்கள் அனைவரும் முன்னனி நடிகர்களாகவே வலம் வந்தார்கள். ரஜினி, கமலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் மற்ற நடிகர்களின் படங்களையும் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.

sathya1_cine

vijayakanth

சத்யராஜும் விஜயகாந்தும் ஆரம்பத்தில் வில்லனாகவே நடித்து பின் ஹீரோவாக வலம் வந்தார்கள். ஆனால் இருவருமே சமகால நடிகர்கள் தான். ஒரே நேரத்தில் தான் சினிமாவிற்குள் வந்திருக்கின்றனர். சத்யராஜின் லொல்லு, நகைச்சுவை மிக்க நடிப்பு இவைகளாலே மக்கள் மத்தியில் பெருமளவு ஈர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க : பாலாவை அடுத்து வெற்றிமாறன்.. வாடிவாசலில் இருந்து வெளியேறும் சூர்யா??

80களில் தொடங்கி 90களில் ஒரு முன்னனி நடிகராகவே வலம் வந்தார் சத்யராஜ். விஜயகாந்த் என்றாலே சண்டைக்கு குறைச்சல் இருக்காது. அவரது சண்டைக் காட்சிகளை பார்க்கவே மக்கள் அலைமோதும். அந்த வகையில் இருவரும் சேர்ந்து நடித்த படம் எது என்றால் ‘ஈட்டி’. அந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாகவும் சத்யராஜ் வில்லனாகவும் நடித்திருப்பார்.

SATHYA2_cine

vijayakanth

ராஜசேகர் இயக்கத்தில் திருப்பூர் மணி தயாரிப்பில் வெளிவந்த ஈட்டி படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு காமெடியான சம்பவத்தை சத்யராஜ் ஒரு மேடையில் கூறி மகிழ்ந்தார். முதுமலை ஏரியாவில் படப்பிடிப்பு நடந்ததாம்.

இதையும் படிங்க : பொன்னியின் செல்வனை ஓவர் டேக் செய்து சாதனை படைத்த தளபதி விஜய்… தொடங்கியது வாரிசு MODE…

அப்போது சத்யராஜை ஒரு யானை துரத்துவது போன்று காட்சியாம். அதற்காக ஒரு யானையையும் வரவழைத்திருக்கின்றனர். ஆனால் படமாக்கும் போது யானை சத்யராஜை துரத்தவே இல்லையாம். அப்படியே நிற்குதாம். என்ன செய்யலாம் என படக்குழு யோசித்துக் கொண்டிருக்க,

sathya3_cine

vijayakanth

உடனே விஜயகாந்த் சத்யராஜுக்கு ஒரு யோசனை கூறியுள்ளார். சத்யராஜ் ஒரு வெல்லத்தை கையில் எடுத்துக்கிட்டு யானை முன்பு நன்றாக காட்டி ஆட்டுங்கள். யானைக்கு வெல்லம் , கரும்பு என்றாலே அலாதி பிரியம். ஆகவே காட்டிவிட்டு ஓடுங்கள்.

உங்கள் பின்னாடியே யானை ஓடிவரும். சிறிது தூரத்தில் அந்த வெல்லத்தை தூக்கி எறிந்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த். இதை கேட்ட சத்யராஜ் ‘விஜி, யோசனை என்னமோ நல்லாத்தான் இருக்கு, ஆனால் நான் வெல்லத்தை தூக்கி போட்டுட்டேன்னு யானைக்கு தெரியாம மறுபடியும் என்ன துரத்துச்சுனா என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க விஜி’ என்று சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாராம் விஜயகாந்த்.

Next Story