காலையில் ஆரம்பித்து மதிய உணவு இடைவேளைக்குள் கம்போஸ் செய்து முடிக்கப்பட்ட செம ஹிட் பாடல்… ராஜாவின் மேஜிக்!
இளையராஜாவின் இசைஞானத்தை குறித்து நாம் பலரும் அறிந்திருப்போம். இளையராஜாவை குறித்து பல பேட்டிகளில் பேசும் சினிமா துறையினர் அவரை ஒரு ஜீனியஸ் என்றுதான் கூறுவார்கள்.
ஒரே சமயத்தில் வெவ்வேறு திரைப்படங்களில் பணியாற்றும் வல்லமையும் இசைஞானத்தையும் பெற்றிருப்பவர் இளையராஜா. அவரின் இசையை குறித்தும் அவர் இசையமைக்கும் பாணியை குறித்தும் புகழாதவர்களே இல்லை என்று கூட கூறலாம்.
இப்போதும் இளையராஜாவின் இசையில் மேஜிக் குறையவில்லை என்றே ரசிகர்கள் கூறிவருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட “விடுதலை” திரைப்படத்தில் இடம்பெற்ற “காட்டு மல்லி” பாடல் வெளியானது. அப்பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. “நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர் ராஜா” என்று ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் நெஞ்சங்கள் காலம் தாண்டியும் கொண்டாடும் ஒரு சூப்பர் ஹிட் பாடல் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “குணா”. இத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் வெற்றிபெறவில்லை என்றாலும் இப்போதும் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. குறிப்பாக “கண்மணி அன்போடு காதலன்” பாடலை நம்மால் மறக்கவே முடியாது. இந்த நிலையில் இந்த பாடலை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த பாடலுக்கான கம்போஸிங் காலை உணவு முடித்துவிட்டு தொடங்கினாராம் இளையராஜா. அதன் பின் மதிய உணவு வேளை வரும்போது இந்த பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம். அதாவது காலம் போற்றும் பாடலை கிட்டத்தட்ட அரை நாளிலேயே இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார் இளையராஜா.
இதையும் படிங்க: கலைஞரின் வசனத்தை பேசமாட்டேன் என ஒற்றைக் காலில் நின்ற பிரபல நடிகை… அதுக்காக என்ன பண்ணாங்க தெரியுமா?