செய்தித்தாளை பார்த்து கடுப்பான இளையராஜா… தம்பியை அசிங்கப்படுத்தி அனுப்பிய சம்பவம்…
இளையராஜா அளவுக்கு இல்லை என்றாலும் கங்கை அமரனும் பல ஹிட் பாடல்களை தமிழ் இசை உலகிற்கு கொடுத்திருக்கிறார். எனினும் அவரது பாடல்களாய் ரசிகர்கள் இளையராஜா கணக்கில் எழுதிவிடுவார்கள். இந்த நிலையில் கங்கை அமரன் முதன்முதலாக இசையமைப்பாளராக ஒப்பந்தமானபோது இளையராஜா நடந்துகொண்ட விதம் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு நாள் பாடகர் மலேசியா வாசுதேவனும் விஜயகுமார் என்பவரும் ஒரு தயாரிப்பாளரை அழைத்து வந்தார்களாம். அந்த தயாரிப்பாளர் மலேசியா வாசுதேவனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முடிவெடுத்திருந்தாராம். அந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்கலாம் என்று கூறியபோது மலேசியா வாசுதேவன், “இளையராஜா சம்பளம் அதிகமாக கேட்பார். அவரது ட்யூன்கள் எல்லாமே கங்கை அமரனிடம் இருக்கிறது. ஆதலால் கங்கை அமரனை இசையமைக்கச் சொல்லலாம்” என கூறியிருக்கிறார்.
அதன்படி கங்கை அமரனை அணுகியிருக்கின்றனர். ஆனால் கங்கை அமரனோ “எனக்கு மியூசிக் போடவே வராது” என கூறியிருக்கிறார். எனினும் மலேசியா வாசுதேன் அவரை சம்மதிக்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு நாள் செய்தித்தாளில் கங்கை அமரன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்று செய்தி வந்திருக்கிறது.
இந்த செய்தியை பார்த்த இளையராஜா, நேராக கங்கை அமரனிடம் சென்று “நீ என்னடா ஏதோ ம்யூசிக் டைரக்டர் ஆகப்போறியாமே. உனக்குலாம் மியூசிக்க பத்தி என்ன தெரியும். போய் கிதார் வாசி போ” என்று விரட்டினாராம். அதன் பின் இளையராஜாவின் குருநாதரான ஜி.கே.வெங்கடேஷ் இளையராஜாவை கடிந்துகொண்டாராம். அதன் பிறகுதான் கங்கை அமரன் இசையமைப்பாளராக பணியாற்றத்தொடங்கினாராம்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வியிடமிருந்து காப்பி அடித்த கங்கை அமரன்… ஆனால் பாடல் செம ஹிட்… என்ன பாடல்ன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க…