மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி 240 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்து பல மாதங்கள் கடந்த நிலையில் தற்போது இளையராஜா அந்தப் படத்துக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த திரைப்படம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு அதிகபட்சமாக 240 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இதையும் படிங்க: இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..
படம் தமிழ்நாட்டில் நன்றாக ஓட ஆரம்பித்ததும் அந்த படக்குழு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு வந்து உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
குணா படத்தின் இயக்குனர் சந்தானபாரதி மற்றும் கமல்ஹாசன் இருவருமே மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவை பாராட்டினர். உதயநிதி ஸ்டாலின், சீயான் விக்ரம், இளையராஜா பயோபிக்கில் நடித்து வரும் தனுஷ் உள்ளிட்டோரை மஞ்சுமல் பாய்ஸ் டீம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
இதையும் படிங்க: நடு விரலை காட்ட சொன்ன ஆதிக்!.. அஜித் ரியாக்ஷன் என்ன தெரியுமா?.. பிரபலம் சொன்ன பலே மேட்டர்!..
இளையராஜா வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் வந்ததும் அவரை சந்திக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தனது “கண்மணி அன்போடு பாடலை” எந்த ஒரு காப்பீட்டுத் தொகையும் கொடுக்காமல் உரிய அனுமதி வாங்காமல் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அல்லது உரிய பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இளையராஜா அனுமதியே வாங்காமல் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு எப்படி பாடலை பயன்படுத்தியது என்றும் ரஜினிகாந்த் கூலி படத்தின் டைட்டில் டீசருக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா தற்போது மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவுக்கு மட்டும் அது வெளியாகி 3 மாதங்கள் கழித்து நோட்டீஸ் கொடுப்பது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: கரகாட்டக்காரன் எந்த படத்தின் சாயல் தெரியுமா? அடடா… இவ்ளோ விஷயங்கள் ஒத்துப்போகுதா?
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…