பரதநாட்டியம் ஆடிய மணி ரத்னம் மனைவி… பங்கமாய் கலாய்த்து தள்ளிய இளையராஜா… அடப்பாவமே!!

by Arun Prasad |
Ilaiyaraaja and Suhasini
X

Ilaiyaraaja and Suhasini

தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் மனோபாலா, ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். “பிள்ளை நிலா”, “ஊர்க்காவலன்”, “மூடு மந்திரம்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. இந்த நிலையில் மனோபாலா, தான் இயக்கிய முதல் திரைப்படமான “ஆகாய கங்கை” திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Director Manobala

Director Manobala

1982 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் கார்த்திக், சுஹாசினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆகாய கங்கை”. நாச்சியப்பன் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Suhasini

Suhasini

இதில் இடம்பெற்ற “தேன் அருவியில்” என்ற பாடல் முழுவதும் சுஹாசினி பரதநாட்டியம் ஆடுவதுபோல் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதனை பார்த்த இளையராஜா “நான் எப்படிப்பட்ட ஒரு அழகான பாடலை உருவாக்கி தந்திருக்கிறேன். நீ என்ன சுஹாசினியை போய் பரதநாட்டியம் ஆடவச்சிருக்க, கிறுக்கனாய்யா நீ” என மனோபாலாவை திட்டினாராம்.

இதையும் படிங்க: நயன்தாரா நடிக்கிறாங்களா?..இந்த படமே வேண்டாம்!..இது என்னடா செல்வராகவனுக்கு வந்த சோதனை!..

Ilaiyaraaja

Ilaiyaraaja

இது குறித்து மனோபாலா அந்த வீடியோவில் “இதற்கு முன் சுஹாசினி பரதநாட்டியம் ஆடுவதுபோல் இளையராஜா பார்த்ததில்லை என்பதால், அவருக்கு அந்த நடனத்தை பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது” என கூறியிருந்தார்.

Manobala

Manobala

மேலும் இளையராஜா “நான் எப்பேர்பட்ட பாடலை உனக்கு கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறேன். நீ அதை கெடுத்துவிட்டாய்” என மனோபாலாவை கடிந்துகொண்டாராம். அதன் பின் மனோபாலாவை சந்திக்கும்போதெல்லாம் சுஹாசினி நடனத்தை குறிப்பிட்டு “யோவ், உன்னைய பத்தி எனக்கு தெரியும்யா, நீ சுஹாசினியையே பரதநாட்டியம் ஆடவச்சவன்தானே” என இளையராஜா அவ்வப்போது கேலி செய்வாராம்.

Next Story