இளையராஜா அந்த இடத்துல வாத்தியாரு மாதிரி… மகன் -மகள்னுலாம் பார்க்க மாட்டாரு…

Published on: January 27, 2024
Ilaiyaraja, Bavatharini
---Advertisement---

இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பவதாரிணியின் மறைவு குறித்து மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

இதையும் படிங்க… இவரே ஒழுங்கில்ல… இன்னொரு நடிகருக்கு வாழ்வு கொடுக்கப்போறாரா?.. விஷாலை பொளந்து கட்டிய பிரபலம்

இளையராஜா மகள் பவதாரிணியின் மறைவு தமிழ்த்திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது மகள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது ஒரு வாரத்திற்கு முன்பே இளையராஜாவுக்குத் தெரியுமாம். என்னுள் சரஸ்வதி வந்து குடியிருக்கிறாள் என்று சொல்வார். உண்மையிலேயே அவர் வீட்டு சரஸ்வதி பவதாரிணி தான்.

ராசைய்யா இளையராஜாவின் ஒரிஜினல் பெயர். பிரபுதேவா நடித்த இந்த ராசைய்யா படத்தில் அருண்மொழியுடன் இணைந்து மஸ்தானா பாடலைப் பாடியிருப்பார் பவதாரிணி. இந்தப் பாடல் பெரிய அளவில் ஹிட். கேசட் விற்பனையிலும் அபார சாதனை படைத்தது.

இதையும் படிங்க… விஜயகாந்துக்கு பிளாப் படங்கள் இவ்வளவு இருக்கா? எந்த ஊரில் இப்படி ஓடுச்சுன்னு தெரியுமா?

சிறுவயதிலேயே குழந்தையை டிராக் பாடுறீயான்னு இளையராஜா கேட்க பாடுறேன்பா என்றாராம் பவதாரிணி. பியானாவும் நன்றாகக் கற்றுக்கொண்டார். உன் வீட்டு ஜன்னல் எட்டி யார் பார்த்தது என்று ராமன் அப்துல்லா படத்தில் பாடுவார். குறிப்பா இந்தப் பாடலைப் பவதாரிணியைப் பாட வைங்கன்னு பாலுமகேந்திரா இளையராஜாவிடம் சொன்னாராம்.

பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. விருது வழங்கும் சமயத்தில் இந்த விருதுக்குக் காரணம் நான் இல்ல. அப்பா தான். ஏன்னா அவரு சின்ன சின்ன தப்பைக் கூட கண்டுபிடிச்சிருவாரு. அந்தப் பாடல் சரியா வர்ற வரை என்னை விடவே இல்லை. நான் இந்த அளவு நல்லா பாடினேன்னா அதுக்கு காரணம் அப்பா தான் என்றாராம் பவதாரிணி.

பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்து விட்டால் அவர் ஒரு மியூசிக் டைரக்டர் தான். அப்போது அப்பா, மகன், மகள் என்ற உறவு எல்லாம் கிடையாது. வாத்தியார் மாதிரி. தப்புன்னா தப்பு தான். இவ்வாறு செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.