விஜயகாந்துக்கு பிளாப் படங்கள் இவ்வளவு இருக்கா? எந்த ஊரில் இப்படி ஓடுச்சுன்னு தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் பல படங்கள் பட்டையைக் கிளப்பியுள்ளன. தயாரிப்பாளர்களுக்கு கையைக் கடிக்காத படம் என்றால் அது கேப்டன் படம் தான். ஆனாலும் அவரது நடிப்பில் 50 நாள்களுக்கும் குறைவாக ஓடி தோல்வி அடைந்த படங்களும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா...

1980ல் அகல் விளக்கு, நீரோட்டம், தூரத்து இடி முழக்கம், 1981ல் சாதிக்கு ஒரு நீதி, நூலறுந்த பட்டம், நீதி பிழைத்தது, 1982ல் பட்டணத்து ராஜாக்கள், ஆட்டோ ராஜா, சிவந்த கண்கள், ஓம் சக்தி, சட்டம் சிரிக்கிறது, 1983ல் வெளியான நான் சூட்டிய மலர் ஆகிய படங்கள் தோல்விப் படங்கள் தான்.

இதையும் படிங்க... இது வேற வேறலெவல் வெறித்தனம்!.. வெளியானது கங்குவா பட புது போஸ்டர்!..

அதே போல, 1984ல் வெளிவந்த மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், வெற்றி, மாமன் மச்சான், சபாஷ், சத்தியம் நீயே, இது எங்க பூமி படங்களும், 1985ல் புதுயுகம், புதிய தீர்ப்பு, ஏமாற்றாதே ஏமாறாதே ஆகிய படங்களும் இந்த லிஸ்டில் வருகின்றன.

1986ல் ஒரு இனிய உதயம், 1987ல் காலையும் நீயே, மாலையும் நீயே, மக்கள் ஆணையிட்டால், 1988ல் தம்பி தங்க கம்பி, 1990ல் எங்கிட்ட மோதாதே, இரவு சூரியன் ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

Kaviyathalaivan

Kaviyathalaivan

1991ல் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், 1992ல் காவியத்தலைவன், 1993ல் எங்க முதலாளி, 1994ல் பெரிய மருது, 2001ல் ராஜ்ஜியம், 2004ல் நிறைஞ்ச மனசு, கஜேந்திரா ஆகிய படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.

2006ல் சுதேசி, 2007ல் சபரி, 2015ல் சகாப்தம் ஆகிய படங்களும் 50 நாட்களுக்கும் குறைவாக ஓடியவை. ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் மதுரையில் ஓடியதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. தென்தமிழகத்தில் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் மதுரை மாநகரில் ஒரு படம் ஓடுவதை வைத்தே அந்தப் படத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story