ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரியாம்… இளையராஜாவைக் கட்டிப்பிடித்து அழுத பாரதிராஜா!

by sankaran v |   ( Updated:2025-04-01 10:36:41  )
bharathiraja ilaiyaraja
X

bharathiraja ilaiyaraja

Bharathiraja and ilaiyaraja: இளையராஜாவின் தம்பி ஜெயராஜ் மனோஜை இழந்து வாடும் பாரதிராஜா பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

மனோஜ் பிறந்த மறுநாள்தான் 16 வயதினிலே படத்தில் கமிட் ஆகுறாரு பாரதிராஜா. மனோஜ் பிறந்த லக்ல தான் அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்குது. அதனால மனோஜ் பேருலயே கம்பெனி வைக்கலாம்னு புதிய வார்ப்புகள் படத்துக்கு மனோஜ் கிரியேஷன்ஸ்னு போட்டாரு. அதுல நிறைய படங்கள் எடுத்துருக்கோம். அதே மாதிரி ஜனனி பேருலயும் வைக்கணும்னு ஜனனி ஆர்ட் கிரியேஷன்ஸ்ங்கற பேருல படம் எடுத்தோம். மனோஜ் பேருல மதுரைல மனோஜ் பிலிம் சர்க்யூட்னு டிஸ்ட்ரிபியூஷன் ஆபீஸ் வச்சிருந்தாரு.

அதை எங்க அண்ணன் மூத்தவரு பார்த்துக்கிட்டாரு. அந்தளவு மனோஜ் ராசியான பையன். அதனால எப்பப் பார்த்தாலும் மனோஜ் மனோஜ்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு. நல்ல ஆரோக்கியமா இருந்த பையன்… எல்லாரையும் புலம்ப வச்சிட்டுப் போயிட்டான். இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரிதான். நாடோடித் தென்றல் படத்துல இளையராஜா கதை. படம் பார்க்கும்போது எங்கிட்ட கேட்டாரு இளையராஜா. 'படம் பார்த்தியா ஜெயராஜ்?'னு கேட்டாரு. 'என்னோட கதையே வரலயே..'ன்னு கோபப்பட்டாராம்.

nadodi thendralஅதன்பிறகு படத்தைத் தியேட்டர்ல பார்க்கும் போது பர்ஸ்ட் ரீல் இளையராஜா வாசிச்சி முடிச்சதும் பாரதிராஜாவும், இளையராஜாவும் கட்டிப்பிடிச்சி அழுறாங்க. டைட்டில்லயே கம்ப்ளீட்டா கார்த்திக்தான் பியானோ வச்சி வாசிச்சிருப்பாரு. மிரட்டி எடுத்துருப்பாரு. பார்த்த உடனே இரண்டு பேரும் அழுறாங்க. அந்த மாதிரி நட்பு. நீரிடிச்சி நீர் விலகுமாங்கற மாதிரி இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1992ல் பாரதிராஜா தயாரித்து இயக்கிய படம் நாடோடித் தென்றல். கார்த்திக், ரஞ்சிதா, நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். ஒரு கணம் ஒரு யுகமாக, சந்தன மார்பிலே, யாரும் விளையாடும் தோட்டம், மணியே மணிக்குயிலே உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

Next Story