கிசுகிசு வந்தபோது இளையராஜா செய்த விஷயம்… அட இது புதுசா இருக்கே!

by sankaran v |   ( Updated:2025-03-30 05:31:14  )
ilaiyaraja
X

ilaiyaraja

Ilaiyaraja: இசைஞானி இளையராஜா லண்டனில் சென்று சிம்பொனியை அரங்கேற்றி தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கே உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளார். அந்த வகையில் அவர் தனியார் சேனல் ஒன்றுக்காக பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் சொன்ன ஒரு விஷயம்தான் இது. வாங்க பார்க்கலாம்.

எதிர்பார்ப்பு என்ற ஒன்று வந்துவிட்டால் அது ஒரு அளவோடு நின்றுவிடுகிறது. நானே நல்ல ரசிகனாக இருக்குற காரணத்தால் அது மக்களிடம் போய்ச் சேருகிறது. அதனால்தான் 50 ஆண்டுகளாக ஒவ்வொரு பாடலும் இன்றும் கேட்கும்போது ஃப்ரஷ்ஷாக இருக்கிறது என்கிறார் இசைஞானி இளையராஜா.

எல்லைகள் அற்ற கற்பனையை பாடலில் கொண்டு வருவது ஒரு வித உத்தி. அது ஒரு டேஸ்ட். திருக்குறள் எப்படி ஒன்றரை அடியில வருது? அதுமாதிரிதான் இதுவும். 7சீரே அதிகம்தான். கற்க கசடற. நிற்க அதற்குத் தகன்னு சொன்னாலே போதும். சூத்திரம் எல்லாம் சுருங்க வேண்டும். அதையே விரிவுபடுத்தி நாம சொல்ல முடியாது.

ஆரம்பத்துல என்னைப் பற்றி ரொம்ப கிசுகிசு எல்லாம் வரும். ஒண்ணுமே பண்ணாம இப்படி எல்லாம் போடுறாங்களேன்னு வருத்தமா இருக்கும். அப்புறம் "யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல், அதெனின் அதெனின் நிழல்" என்று சொல்லி இருப்பார். நீ எதை எதை வேணாம்னு நினைக்கிறீயோ, அந்தப் பொருள்களால உனக்கு ஒரு துன்பமும் இல்லைன்னு சொல்றாரு. அடடே. இப்படி இருக்கேன்னு சொல்லிட்டு, பத்திரிகை படிக்கிறது, டிவி பார்க்குறதை அன்னைக்கே விட்டுட்டேன் என்கிறார் இளையராஜா.

ilaiyarajaஅதைப் போல சினிமா என்பது ஒரு ரசனையான விஷயம். அதுல நடிக்கிறது ஒரு கலை. கேமரா ஒரு கலை. டைரக்ட் பண்றது ஒரு கலை. திரைக்கதை எழுதுவது ஒரு கலை. மியூசிக் ஒரு கலை. நாம எழுதுற பாடலும் ஒரு கலை. அது ரொம்ப கஷ்டமான இலக்கியத்தரமான வார்த்தைகளைப் போட்டு எழுதணும்கற அவசியம் இல்லை.

ரொம்ப எளிமையான வார்த்தைகளைப் போட்டு எழுதுனாத் தான் மக்களைப் போய்ச் சேரும் என்று அழகாக தன் கலையைப் பற்றி விவரிக்கிறார். சினிமாவில் இசை மட்டும் அல்லாமல், பாடகராகவும், கவிஞராகவும் இருந்து பன்முகத்திறனைக் காட்டுபவர் தான் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story