சீனியரை விட்டுட்டு ஜூனியர் இளையராஜாவுக்கே அதிக வாய்ப்பு… பஞ்சு அருணாச்சலம் செய்தது நியாயமா?

by sankaran v |   ( Updated:2025-03-26 23:54:05  )
ilaiyaraja panju arunachalam
X

ilaiyaraja panju arunachalam

Ilaiyaraja:

இளையராஜாவுடன் பஞ்சு அருணாச்சலமும் சேர்ந்துவிட்டால் அந்தப் படம் சூப்பர்ஹிட்தான். தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் வாய்ந்தவர் பஞ்சு அருணாச்சலம். அவருடைய படங்களில் இளையராஜாவுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. அது எப்படி வந்ததுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

பஞ்சு அருணாசலத்தின் பல படங்களில் இசை அமைப்பாளராக இருந்தவர் விஜயபாஸ்கர். ஆனால் இளையராஜா வந்ததுக்கு அப்புறம் விஜயபாஸ்கரை முற்றிலும் ஒதுக்கி விட்டார் பஞ்சு அருணாச்சலம். இது முற்றிலும் சரியா என்ற கேள்விக்குப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

விஜயபாஸ்கரைத் தமிழ்த்திரை உலகிற்குக் கொண்டு வந்தவர் பஞ்சு அருணாச்சலம். பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதற்குப் பிறகுதான் அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த பிறகு தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால்தானே அவர் பிரபலமான இசை அமைப்பாளராக வருவார்.

அதனால் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார். ஒரு காலகட்டத்துக்குப் பின்னாலே பஞ்சு அருணாச்சலத்தின் எல்லா திரைப்படங்களுக்கும் இளையராஜா இசை அமைத்தார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் இளையராஜாவின் அசாத்திய ஆற்றல்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இளையராஜான்னா சும்மாவா? தமிழ்த்திரை உலகில் இசை ஜாம்பவான் யார் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இளையராஜா தான். 83 வயதிலும் சிம்பொனி இசையை லண்டனில் போய் அரங்கேற்றி உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது இசையை இன்றைய 2 கே கிட்ஸ் தலைமுறையினரும் ரசித்து வருகின்றனர்.

டிவியில் ஆடல் பாடல் நிகழ்ச்சியானாலும் சரி. சூப்பர் சிங்கர் ஆனாலும் சரி. பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள்தான் போடப்படுகின்றன. அதே போல எங்காவது மேடைக்கச்சேரி நடந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தவறாமல் இடம்பிடித்து விடும். அந்த வகையில் இந்த வயதிலும் இளைஞர் போல இளையராஜா சுறுசுறுப்பாக எல்லா இடங்களுக்கும் சென்று மேடைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். எல்லா இடங்களிலும் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருவதை நாம் காணலாம்.

Next Story