வைரமுத்து கவிப்பேரரசர் என்றால் இளையராஜா இசைஞானி. இருவருக்குள்ளும் சமீபத்தில் மொழியா, இசையா என்று மோதல் கூட வந்ததுண்டு. இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
இதற்கு என்ன காரணம்? இருவரில் யார் மேல் தப்பு? இருவருமே தங்கள் துறையில் பிரபலமானவர்கள் தானே. ஒரு வேளை ஈகோவா இருக்குமோ என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நடந்தது என்ன என்று சொல்கிறார் இந்த பிரபலம். வாங்க பார்க்கலாம்.
நாடோடித் தென்றலுக்குப் பிறகு இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் மனக்கசசப்பு இருந்ததா சொன்னாங்க. அவங்க இப்பவும் நட்போடு தான் இருக்காங்களான்னு கேட்டுருக்காங்க. அதே மாதிரி வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் பிரச்சனை வந்ததே அதுக்கு என்ன காரணம்?
நாடோடித் தென்றல் படத்தில் பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. அப்படி இருந்தும் கேப்டன் மகள் படத்தில் ஏன் ஹம்சலேகாவைப் ஒப்பந்தம் செய்தார் என்றால் கொடிபறக்குது படத்தில் பணியாற்றும்போதே ஹம்சலேகா இன்னொரு படத்திலும் நான் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
அதை நிறைவேற்றும் விதத்தில தான் கேப்டன் மகள் படத்தில் ஹம்சலேகாவை ஒப்பந்தம் செய்தார். அதுக்குப் பின்னாலே பாரதிராஜா உருவாக்கிய படம் கிழக்குச்சீமையிலே. அந்தப் படத்துக்கு முதலில் தயாரிப்பாளரா இருந்தது மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். அதற்குப் பின்னால் தயாரிப்பாளர் மாறினார். அந்தக் காலகட்டத்தில் தான் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமாகி இருந்தார்.
அவர் இசை அமைத்த 2 படத்தோட பாடல்களை வைரமுத்து பாரதிராஜாவுக்குப் போட்டுக் காட்டினார். அவரோட இசை ரொம்ப வித்தியாசமாக இருந்ததால அவருடன் சேர்ந்து பணியாற்றலாம் என்ற முடிவை பாரதிராஜா எடுத்தார். அதனால் தான் தொடர்ந்து அவருடன் 3 படங்களிலே பணியாற்றினார். பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பு இருக்கே. அது வித்தியாசமானது.
Also read: வேட்டையன் படத்துக்கு தலைப்பு வந்தது எப்படி தெரியுமா? பிரபலம் புதுத்தகவல்
நீரிடித்து நீர்விலகாது என்பது போல அவர்களை யாராலும் பிரிக்க முடியாது. வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்றால் அதுக்கு முக்கிய காரணம் வைரமுத்துவோ, இளையராஜாவோ இல்ல. இளையராஜாவோடு பக்கத்துல இருந்த சில நபர்கள் தான் காரணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கங்குவா திரைப்படத்தின்…
புஷ்பா 2…
Kanguva: கங்குவா…
2004ல் 'தல'…
Shariq: தமிழ்…