இளையராஜாவை விட்டு பிரிந்தும் வைரமுத்து பாடல் எழுதிருக்காரே... மொழிக்குத் தடையில்லையோ!
வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிய என்ன காரணம் என்று பார்த்தால் அது சுவாரசியமானது. வைரமுத்து எப்போதும் ஒரு படத்தில் முழு பாடல்களையும் அவரே எழுதும் பழக்கம் உடையவர். ஆனால் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் மட்டும் இளையராஜா ஒரு பாடலை வாலியை வைத்து எழுத வைத்து விடுகிறார். இதனால் இருவருக்குள்ளும் விரிசல் வந்து விடுகிறது.
நிழல்கள் படத்தில் வைரமுத்து எழுதிய இது ஒரு பொன்மானைப் பொழுது இளையராஜாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அப்போது வைரமுத்துவைக் கட்டி அணைத்துப் பாராட்டினார் இளையராஜா. அதன்பிறகு வேறு இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் எழுதினார். அதன் காரணமாக இளையராஜா இசை அமைத்த படங்களுக்கு காலதாமதமாக வந்தார். இது இருவருக்குள்ளும் மனக்கசப்பை உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படியே தொடர்ந்த ஜோடி புன்னகை மன்னன் படத்திற்குப் பிறகு இந்த ஜோடி பிரிந்தே விட்டது. ஏ.ஆர்.ரகுமானை பல இயக்குனர்களிடம் வைரமுத்து தான் அறிமுகப்படுத்தினார். அப்படியே இருவருக்குள்ளும் நட்பு உண்டாகி இவரது படங்களுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார். மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வந்தார்.
இந்த நிலையில் வைரமுத்து இளையராஜாவுக்காக கடைசியா எழுதுன பாடல் எதுன்னு வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அளித்த பதில் இதுதான்.
இளையராஜாவும், வைரமுத்துவும் கடைசியாகப் பணியாற்றிய படம் எதுன்னா அது புன்னகை மன்னன் தான். ஆனால் திரைக்கு வந்த கடைசி படம் சிறைப்பறவை. அவங்க இரண்டு பேரும் பிரிந்ததுக்குப் பின்னாடியும் இளையராஜாவின் இசையில் ஒரு படத்துக்கு முழுவதும் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அது ஒரு மொழிமாற்றுப் படம்.
Also read: அடுத்து வேட்டையன் வராரு! ரெடியா இருங்க.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சுவாதிமுத்யம் என்ற பெயரிலே தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கி இருந்த படம் தமிழ்ல சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. கமல், ராதிகா ஜோடியாக நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு எல்லாப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து தான்.