Connect with us
Bhagyaraj

Cinema News

தொழில்னு வந்த பிறகு தம்பியாவது பாசமாவது! காலில் விழாத குறையா இளையராஜாவிடம் கெஞ்சிய பாக்யராஜ்

இசையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இளையராஜா. எம்.எஸ்.விக்கு பிறகு தமிழ் சினிமாவில் இன்றளவும் இசையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். தனது கிராமத்திய இசையால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா.

1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இன்று வரை தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் கொடி கட்டி பறந்திருக்கிறார்கள். அவர்களை விட இளையராஜாதான் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : துபாயில ஷூட்டிங் வச்சது அதுக்கும் சேர்த்துதானாம்!.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்த அஜித்!..

ஒரே நேரத்தில் ஐந்து ஆறு படங்களுக்கு இசையமைக்கும் திறமை கொண்டவர் இளையராஜா. மொத்த இயக்குனர்களும் காத்திருந்து தனக்கு தேவையான பாடல்களை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு செல்வார்கள். அத்தனை சிறப்பு மிக்கவராக விளங்கியிருக்கிறார்.

ஆனால் புகழ் இருக்குமிடத்தில் கொஞ்சம் ஆணவமும் இருக்கும் என்று சொல்வார்கள். இளையராஜாவுக்கும் கொஞ்சம் ஆணவம், திமிரு இருக்கத்தான் செய்தது. இதை பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் கூறியதை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் நடிகர் பாக்யராஜும் இளையராஜாவை பற்றி ஒரு ரகசியத்தை பகிர்ந்தார்.

இதையும் படிங்க : அந்த நடிகையை மறைமுகமாக டார்ச்சர் செய்யும் அனகோண்டா நடிகர்!.. மீண்டும் காதல் வலையில் வீழ்த்த திட்டமா?..

பாக்யராஜ் இயக்கிய படங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படமாக முந்தானை முடிச்சு திரைப்படம் விளங்கியது. கதை , திரைக்கதையை விட படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது இளையராஜாவின் இசைதான்.ஆனால் முதலில் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு காரணம் முதலில் பாக்யராஜ் கங்கை அமரனைத்தான் இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஏனெனில் அதுவரை வரிசையாக கங்கை அமரன் தான் பாக்யராஜ் படத்திற்கு இசையமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அதனாலேயே முந்தானை முடிச்சு படத்திற்கு கங்கை அமரனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : காசிக்கு போன தாத்தா எப்படி வராருனு தெரியுமா? ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் களைகட்டப் போகும் எபிசோடு

ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் படத்தின் கதைப்படி இளையராஜா இசையமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல இளையராஜாவிடம் போய் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். ஆனால் இளையராஜாவோ  ‘முதலில் என் தம்பியிடம் தானே சென்றீர்கள். அதனால் நான் இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் உங்கள் தம்பிதானே? என பாக்யராஜ் கேட்க  ‘தொழில்னு வந்துவிட்டால் தம்பி, பாசம் என்பதெல்லாம் இருக்கக் கூடாது’ என்று இளையராஜா சொன்னாராம். அதன் பிறகு எப்படியோ கெஞ்சி கூத்தாடி இளையராஜாவை சம்மதிக்க வைத்திருக்கிறார் பாக்யராஜ்.

google news
Continue Reading

More in Cinema News

To Top