இத விட வேற அவமானம் இல்ல! பாட முடியாது என மறுத்த இளையராஜாவுக்கு தக்க பதிலடி கொடுத்த இயக்குனர்
Ilaiyaraja: இன்னொரு இசையமைப்பாளர் இசையமைக்கும் அந்த டியூனுக்கு என்னால் பாட முடியாது என்று இளையராஜா சொன்னதாக பிரபல இயக்குனர் ஒருவர் ஒரு பேட்டியின் மூலம் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் துறையுலகில் இளையராஜாவின் இசைக்கும் அவருடைய குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள்.
அவர் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் தன் குரலில் ஒரு பாடலையாவது பாடாமல் இருக்க மாட்டார் இளையராஜா. அப்படி பெரும்பாலான படங்களில் அவரே டியூன் போட்டு அவரே பாடிய பல பாடல்கள் மாபெரும் ஹிட் ஆகி இருக்கின்றன. அந்த அளவுக்கு இளையராஜாவின் குரலுக்கு என ஒரு தனித்துவம் இருக்கிறது. அதேபோல பல இயக்குனர்கள் எப்படியாவது ஒரு பாடலையாவது தன் படங்களில் இளையராஜாவை பாட வைக்க வேண்டும் என்ற ஆசையிலும் அவரிடம் போய் அணுகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மலேசியாவின் குரலில் ரஜினிக்கே தெரியாமல் பாட்டு… அப்புறம் நடந்த சிக்கல்தான் ஹைலைட்!
அந்த வகையில் இயக்குனர் ராதா பாரதியும் இளையராஜாவிடம் சென்று என் படத்தில் ஓப்பனிங் சாங் ஒரு பாடல் நீங்கள் பாடி கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். அந்த படம் பிரசாந்த் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம். அதில் ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்ற ஒரு பாடல் இடம் பெறும்.
அந்தப் பாடலை முதலில் இளையராஜாவை வைத்துதான் பாட வைக்க வேண்டும் என தாராபாரதி நினைத்திருக்கிறார். ஆனால் படத்திற்கு இசையமைத்தது தேவா. உடனே இளையராஜா ‘என்னுடைய வலிமைக்கு ஏற்ற மாதிரி தான் என்னால் பாட முடியும். அது என்னோட டியூனில் அமைந்த பாடலை மட்டும் தான் பாட முடியும். வேறொருவர் இசையமைத்து நான் பாடுவது என்பது சாத்தியமாகாது.
இதையும் படிங்க: மகிழ் திருமேனி நிலைமை தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்குமா!.. 2 நாட்களிலேயே ஆட்டத்தை ஆஃப் பண்ண அஜித்?..
அவர் திடீரென ஹை பிட்ச்சில் ஏற்றும் போது அந்த அளவுக்கு என்னால் பாட முடியாது. ஒருவேளை நான் பாடி அது அவருக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன பாட்டு பாடுகிறார் என்றெல்லாம் கருத்து வெளிப்படும். அதனால் என்னால் முடியாது’ என மறுத்துவிட்டாராம்.
இருந்தாலும் தாரா பாரதிக்கு இளையராஜாவின் குரல் அவருடைய ஆழ் மனதில் பதிந்து போக அவர் குரலில் எப்படியாவது ஒரு பாடலை பாட வைக்க வேண்டுமே என்று எண்ணி சரி அவர் இல்லை என்றால் என்ன அவர் குரலை ஒத்த மாதிரியே அவருடைய தம்பி கங்கை அமரன் இருக்கிறாரே என அந்தப் பாடலை கங்கை அமரனை வைத்து பாட வைத்திருக்கிறார் ராதா பாரதி. அந்த பாடலும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது.
இதையும் படிங்க; விஜய் வீட்டு முன்னாடி திரிஷா பண்ணது டேர்!.. விடாமல் அசிங்கப்படுத்தும் சுசித்ரா!.. ஆக்ஷன் எடுப்பாரா?