மகிழ் திருமேனி நிலைமை தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்குமா!.. 2 நாட்களிலேயே ஆட்டத்தை ஆஃப் பண்ண அஜித்?..

விடாமுயற்சி படத்தை ஆசை ஆசையாக இயக்க வந்த மகிழ்திருமேனி நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் அதே நிலைமை நேர போவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படங்கள் திட்டமிட்டபடி வெளியாகின. ஆனால் இந்த மூன்று படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் குவிக்கவில்லை.

இதையும் படிங்க: விஜய் வீட்டு முன்னாடி திரிஷா பண்ணது டேர்!.. விடாமல் அசிங்கப்படுத்தும் சுசித்ரா!.. ஆக்‌ஷன் எடுப்பாரா?

தனது 62வது படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என அஜித் நினைத்த நிலையில், அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக வெளியேற்றி மகிழ் திருமேனியை உள்ளே கொண்டு வந்தார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜர்பைஜானில் முழுக்க முழுக்க விடாமுயற்சி திரைப்படம் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் 40% படப்பிடிப்புகள் இன்னமும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.

இதையும் படிங்க: கிஸ் அடிச்சதிலேயே பிடிச்ச நடிகை! கார்த்திக் இப்படி பொசுக்குனு சொல்லிட்டாரே

விடாமுயற்சி திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அஜித்தின் மேனேஜர் படத்தில் அஜித் டூப் போடாமல் விபத்து காட்சியில் நடித்த வீடியோவை அப்படியே வெளியிட்டு, விடாமுயற்சி படம் டிராப் என சொல்வது நியாயமற்ற செயல் எனக் கூறி இருந்தார். தேர்தல் முடிந்த பின்னர் விடாமுயற்சி படத்தை அஜித் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்துக்கு டாட்டா காட்டிவிட்டு குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் அஜித் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின.

படு ஜாலியாக ஆதிக் ரவிச்சந்திரன் தனது செட்டில் படங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அஜித் தனது படப்பிடிப்பில் இப்படி எல்லாம் ஆட்டம் போடக்கூடாது என எச்சரித்துள்ளதாகவும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அசிஸ்டன்ட்டாக தனது டீமில் உள்ளவர்களை அனுப்பியுள்ளதாகவும் கூறுகின்றனர். முழுசா இந்த படமாவது சொன்னபடி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகுமா என்பது சந்தேகம் தான் என கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அந்த குரல் என் குரல் அல்ல!.. பயில்வான் ரங்கநாதனால் பதறிப்போன சுசித்ராவின் எக்ஸ் கணவர்!..

 

Related Articles

Next Story