கிஸ் அடிச்சதிலேயே பிடிச்ச நடிகை! கார்த்திக் இப்படி பொசுக்குனு சொல்லிட்டாரே

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக அன்றும் இன்றும் என்றும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கார்த்திக். 80,90களில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த கார்த்திக் பல பெண்களின் மனதை கொள்ளையடித்த நடிகராக மாறினார். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் இவருக்கு ஏராளம்.

அந்த அளவுக்கு நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே இவருடைய குறும்புத்தனமான பேச்சால் அனைவரையும் எளிதில் கவர்ந்தவர். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் ஓரிரு படங்களின் தோல்வி இவரை மிகவும் பாதித்தது. அதன் பிறகு மௌன ராகம் என்ற படம் இவருக்கு ஒரு வரப் பிரசாதமாக கிடைத்தது.

இதையும் படிங்க: சுசித்ராவுக்கு இதெல்லாம் தேவையா? எரிகிற விளக்குல இப்படியா எண்ணையை ஊத்துறது? பிரபலம் விளாசல்

அந்த படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அந்த ஒரு படம் தான் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்ட படமாக மாற்றியது. அதன் பிறகு அக்னி நட்சத்திரம் மிகப்பெரிய மாற்றத்தை அவருக்கு உருவாக்கியது .இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கார்த்திகை நடிகைகளும் விரும்ப ஆரம்பித்தனர்.

ஒரு சில நடிகைகள் கார்த்திக்கின் மேல் காதலிலும் விழுந்தனர். இந்த நிலையில் கார்த்திக் பேசிய ஒரு பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது. அதில் கார்த்திக்கிடம் நீங்கள் கிஸ் பண்ணதிலேயே உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொல்வதைவிட கூடியிருந்த ரசிகர்கள் குஷ்பூ குஷ்பூ என கத்தினர். ஏனெனில் வருஷம் 16 திரைப்படத்தில் குஷ்புவை கார்த்திக் கிஸ் பண்ணுவது மாதிரி ஒரு சீன் அமைந்திருக்கும்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் இப்போ யாரோட சுத்துறாரு தெரியுமா?.. ரஜினிகாந்த் ரசிகர்கள் பார்த்தா காண்டாகிடுவாங்களே!

ஆனால் இதைப் பற்றி கார்த்திக் நான் குஷ்புவை இதுவரை கிஸ் பண்ணதே இல்லை எனக் கூறினார். ஆனால் அந்த கேள்விக்கு பதில் சொன்ன கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை தான் முதன் முதலில் கிஸ் பண்ணேன். அதுவும் தாமரை மலரை கையில் கொடுத்து வயிற்றில் கிஸ் பண்ண சொன்னார் பாரதிராஜா. அதுதான் உங்கள் கேள்விக்கு பதில் என சொல்லி சிரித்துக்கொண்டார்.

 

Related Articles

Next Story