இளையராஜாவோட பயோபிக் சூட்டிங் பரபர அப்டேட்... இயக்குனர் சொன்ன அந்தத் தகவல்
இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுகிறார். இந்தப் படத்தை இயக்குபவர் அருண்மாதேஸ்வரன். படம் அறிவித்து இவ்ளோ நாள்களாகியும் அதைப் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையில் தனுஷ் அச்சு அசலாக இளையராஜாவின் இளமைத் தோற்றத்தில் பொருந்தி இருந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இளையராஜா கூட சமீபத்தில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார். அப்போது அவர் அன்னக்கிளி படத்தில் உள்ள பாடல்கள் உருவான விதம் பற்றி கூறுகையில் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதை எல்லாம் பயோபிக்கில் காட்டுவார்களோ மாட்டார்களோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.
அந்த வகையில் இளையராஜாவின் பாடல்களை ரசிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது. அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது.
இந்த நிலையில், படத்தைப் பற்றி நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அண்மையில் கொட்டுக்காளி படத்தின் திரையீட்டின்போது இயக்குனர் அருண்மாதேஸ்வரனிடம் பேசிக் கொண்டு இருந்தேன். ரெண்டு மூணு நாள்கள் இளையராஜாவின் பயோபிக் திரைக்கதை சம்பந்தமாக பண்ணைபுரத்துக்குச் செல்ல இருப்பதாக எங்கிட்ட சொன்னார். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் துவக்கத்திலே அந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு 'இளையராஜா இசையின் ராஜா' என்று பெயரிட்டுள்ளனர். படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் இணைந்து தயாரிக்கிறது.
இளையராஜா 1000 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். உலகளவல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.