கம்போசிங்காக போன இடத்துல இப்படி பண்ணுவாருனு நினைக்கல! இளையராஜாவை பற்றி பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்
தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவானாக மின்னிக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த இளையராஜா இன்றுவரை தன் இசையில் எந்தவொரு குறையும் இல்லாமல் அதே மெல்லிசையை தந்து கொண்டு வருகிறார்.
கிட்டத்தட்ட 80களில் இவரின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது. இவரின் வாசலில் காத்துக்கிடந்த இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என ஏராளம். மேற்கத்திய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் மேஸ்ட்ர” என்று அழைக்கப்படும் அவர்,
இதையும் படிங்க: நிக்ஷனுக்காக இன்னொரு பலியாடு.. பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தானா..?
இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, ‘தேசிய விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கேரள அரசின் விருது’, ‘நந்தி விருது’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘தமிழ்நாடு மாநில திரை விருது’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் மண்வாசனை படத்தில் புகழ்பெற்ற பாடலான ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடல் உருவான விதத்தை சித்ரா லட்சுமணன் கூறினார். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. பாடல் கம்போசிக்காக கன்னியாகுமரி சென்றார்களாம் படக்குழு.
இதையும் படிங்க: ஒரு படத்துக்கு இசையமைத்த ஐந்து இசையமைப்பாளர்கள்… பாட்டு எல்லாமே ஹிட்டு.. என்ன படம் தெரியுமா?
மொத்த பாடல்களையும் கம்போஸ் பண்ண இளையராஜா எப்படியும் மூன்று நாள்கள் எடுத்துக் கொள்வார் என்று கருதி கன்னியாகுமரியில் ஹோட்டல் எடுத்து தங்க முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் இளையராஜா மண்வாசனை படத்தின் மொத்த பாடல்களையும் முடிக்க எடுத்துக் கொண்ட நேரமோ 6 மணி நேரம்தானாம்.
காலை 9 மணிக்கு உட்கார்ந்தவர் மாலை நேரத்திற்குள் மொத்தப் பாடல்களையும் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டாராம். அதன் பிறகு கன்னியாகுமரியில் இருந்து உடனே படக்குழு சென்னைக்கு வந்துவிட்டதாக சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய நடிகர்!.. பொன்மன செம்மல் செய்ததுதான் ஹைலைட்!..