தம்பிக்காக பெரிய ரிஸ்க் எடுத்த இசைஞானி!. ஆனா பாட்டும் ஹிட்டு.. படமும் ஹிட்டு...

by sankaran v |
GA, Ilaiyaraja
X

GA Ilaiyaraja

பொதுவாக ஒரு படத்தின் கதையை கேட்டுதான் இளையராஜா இசையமைக்க சம்மதம் சொல்வார். ஆனால், தம்பிக்காக கதையையே கேட்காமல் பாடல்களை போட்டு கொடுத்து இருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்கள் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகின்றன. அதுதான் கரகாட்டக்காரன். சிவாஜிக்கு எப்படி தில்லானா மோகனாம்பாள் சூப்பர் ஹிட் அடித்ததோ அதே போல கரகாட்டக்காரனும் மிகப் பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது.

கங்கை அமரன் 19 படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 17 படங்களுக்கு இசை அமைத்தது அண்ணன் இளையராஜா தான். கங்கை அமரன் படங்களிலேயே மாபெரும் வெற்றி பெற்ற படம் என்றால் அது கரகாட்டக்காரன் தான்.

1989ல் ராமராஜன், கனகா, சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என கல கல நட்சத்திரப் பட்டாளங்களுடன் களம் இறங்கியது கரகாட்டக்காரன். இப்படத்தை இயக்குவதற்காக அண்ணனிடம் சென்று நான் கரகாட்டக்காரன் என்ற பெயரில் படம் எடுக்கப் போகிறேன் என்றாராம். அதற்கு இளையராஜா அது என்ன படம்?

அந்த மாதிரி பெயர் வைத்தால் ஓடுமா என்று கேட்டாராம். அதற்கு ஏற்றா மாதிரி நான் கதை எழுதியுள்ளதாகவும், எனக்கு பாட்டு மட்டும் ரெடி பண்ணிக் கொடுங்க என்றும் கேட்டாராம் கங்கை அமரன்.

KN1

உடனேயே கதையே கேட்காமல் 9 பாடல்களை ரெடி பண்ணிக் கொடுத்தாராம் இசைஞானி. இவற்றில் பாட்டாலே பாடலை மட்டும் இளையராஜாவே எழுதி உள்ளார். மீதி பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ளார். அந்த நவரசப் பாடல்களும் இன்று வரை நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே தட்டாத பாடல்கள். இதற்காகவே படம் வெற்றி விழா கண்டது.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு பாடலும் 6 நிமிடங்கள் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது பாடல்களுக்கு மட்டுமே 54 நிமிடங்கள் ஆகி விடும். இதில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவைக்கு அரை மணி நேரம். மீதி இருக்கிற ஒரு மணி நேரத்தில் அழகான கதையை சொல்லி, அசத்தியுள்ளார் கங்கை அமரன்.

அந்த அளவு அசாத்திய திறமை உள்ள இயக்குனர் தான் அவர். பாட்டாலே, இந்த மான், குடகுமலை, மாங்குயிலே (2 தடவை) மாரியம்மா, முந்தி முந்தி, நந்தவனத்தில், ஊருவிட்டு ஊருவந்து உள்பட மனதைத் தொடும் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன. செந்தில், கவுண்டமணியின் வயிறு குலுங்க வைக்கும் வாழைப்பழ காமெடியும் இந்தப் படத்தில் தான் என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

Next Story