இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?

by Rohini |
dhanush
X

dhanush

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இசை ஜாம்பவானாக 70களில் இருந்து இன்று வரை ரசிகர்களிடையே ஜொலிப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா தொடர்ந்து தனது இசையால் இந்த சினிமா உலகை மகிழ்ச்சியில் திகைக்க வைத்தார்.

இவரது இசைதான் சில படங்களுக்கு உயிரோட்டமாக இருந்தது. நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வதற்கு முன் முதலில் இளையராஜா கால்ஷீட் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர்கள் ஏராளம். ஒரே நாளில் இரண்டு, மூன்று படங்களுக்கும் இசையமைத்த காலமெல்லாம் உண்டு.

இதையும் படிங்க: ஹீரோவா நடிச்சா நான் காலி!.. ஸ்கெட்ச் போட்டு வேலை செய்த திரைக்கதை மன்னன்..

இவரது இசைக்காகவே ஓடிய படங்களும் இருக்கின்றன. இந்தளவுக்கு புகழுக்கு சொந்தக்காரராக விளங்கும் இளையராஜா சர்ச்சைகளிலும் சிக்காமலா இருப்பாரா? அவருடைய குணமே இப்படித்தான் என ஒரு சில பேர் சொல்லி வருத்தப்பட்டதும் உண்டு.

எத்தனையோ முறை சண்டை, பிரச்சினை என இளையராஜாவுடன் மோதிய பிரபலங்கள் ஏராளம். அதனால் இந்தியாவே மதிக்கத்தக்க ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கத்தான் செய்யும் என நினைத்து இளையராஜாவின் பயோபிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பால்கி எடுப்பதாக இருந்தது.

இதையும் படிங்க: எல்லா அசிங்கமும் அஜித்துக்குத்தான்! திட்டுறதுக்கு எனக்கு உரிமை இருக்கு.. பிரபலம் கொடுத்த ஷாக்

ஆனால் அதில் இளையராஜாவாக நடிக்கும் தனுஷே மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரனை இளையராஜாவிடம் அனுப்பி வைத்ததாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. அதில் இப்போது இளையராஜா அருண் மாதேஸ்வரனை அவருடைய பயோபிக்கை எடுக்க தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அருண் மாதேஸ்வரனை பற்றி தெரிந்துதான் இளையராஜா அவரை தேர்ந்தெடுத்தாரா? என கேட்டு வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் அருண் மாதேஸ்வரனை தன்னுடன் ஒரு 2 மாதம் டிராவல் செய்யுமாறு இளையராஜா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் இளையராஜா இன்னும் ஏராளமான விஷயங்களை அருண் மாதேஸ்வரனிடம் சொல்ல வசதியாக இருக்கும் என்ற காரணத்தினாலே இப்படி சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லெஜண்ட்க்கு மட்டுமல்ல பிரபல இயக்குனருக்கும் அல்வா தந்த நயன்தாரா!… ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுங்கோ…

Next Story