பாரதிராஜாவை சந்தித்த இளையராஜா… அந்த அரை மணி நேரம் நடந்தது இதுதான்!

by sankaran v |
bharathiraja, ilaiyaraja
X

bharathiraja, ilaiyaraja

பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் மறைந்து அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தினார். இந்த மாதிரி சோதனை யாருக்கும் வரக்கூடாது. தந்தையின் பிரிவு தாளாமல் மகன் துயர் உறுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு மகனின் பிரிவு தாளாமல் தந்தை வேதனையில் தவிக்கிறார்.

இளையராஜாவும் கடந்த ஆண்டு தன் மகள் பவதாரிணியின் மறைவால் நொந்து போனார். இளையராஜாவும், பாரதிராஜாவும் சிறுவயது நண்பர்கள். அதனால் அவர்களுக்குள்; அப்படி ஒரு நட்பு எப்போதும் இருக்கும். மகனின் பிரிவால் வாடும் பாரதிராஜாவை உடனே போய் பார்த்தால் அது நல்லாருக்காது என்று எண்ணி மனோஜிக்காக திருவண்ணாமலையில் மோட்சதீபம் ஏற்றினார். அதன்பிறகு பாரதிராஜாவும் கொஞ்சம் நார்மலாக வேண்டும் என்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் போய் இளையராஜா சந்தித்துள்ளார். அதன்பின் என்ன நடந்ததுன்னு பாருங்க.

bharathirajaஇளையராஜாவின் வீட்டுல தான் மனோஜ் சிறுவயதில் விளையாடினார். நாடோடி தென்றல் தான் பாரதிராஜாவுக்கு இளையராஜா இசை அமைத்த கடைசி படம். அந்தப் படத்தோட கதையே இளையராஜாவோடதுதான். ஆனா அந்தப் படத்தோட தீமே வேற வேற ஜானர்ல போயிடுச்சு. என்னடா நம்ம ஒரு கதையைச் சொன்னா அவரு ஒரு படம் எடுத்துருக்காரேன்னு நினைச்சாராம் இளையராஜா.

அரைமணி நேரம் சந்தித்தும் இருவரும் மவுனமாகவே இருந்தார்களாம். இளையராஜாலும் எதுவுமே பேச முடியவில்லை. துயரத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைக் காட்டிலும் மவுனமாக இருப்பதுதான் சிறப்பு. சமீபத்தில் கங்கை அமரன் சந்தித்த போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பாடல்கள் பாடினார். பாரதிராஜா ஏதோ ஒன்றை சிந்தித்தவராய் ஊஞ்சலில் இருந்து கொண்டு அவர் பாடியதையும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஆனால் பாரதிராஜா தன் மகனை இழந்து பிரிவின் துயர் தாங்காமல் வாடி வருகிறார். என்ன சொல்லி தேற்றுவேன் என்று தெரியாமல் தவித்தார் இளையராஜா. அதனால்தானோ என்னவோ மவுனமாக இருந்துள்ளார். மவுனத்தை விட சிறந்த ஆறுதல் எதுவும் இருக்க முடியாது என்பது இசைஞானிக்குத் தெரியாதா என்ன?

Next Story