ஆஸ்கார் வேணா வாங்காம இருக்கலாம்... ஆனா இதுல நம்பர் ஒன் இளையராஜாதான்!..
இளையராஜா தமிழ்ப்படங்களில் கோலோச்சியதைப் போல பாலிவுட் படங்களில் நிலைத்து நிற்க முடியவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பார்க்கலாம்.
இளையராஜா கோலிவுட்டில் ரொம்பவே பிசியாக இருந்த நேரம். பாலிவுட்டில் அப்போது அவருக்கு வாய்ப்பு வந்த போதும் அங்கு போகமுடியவில்லை. தமிழ்ப்பட உலகுக்கு அவர் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர் ஆனார்.
இளையராஜாவின் இசை ஒரு புதுவகை அனுபவத்தைத் தந்தது. அது மேற்கத்திய இசை, பாரம்பரியம், நாட்டுப்புற இசைக்கு இடைப்பட்ட வகையில் ஒரு கலவையான இசையைத் தந்தது. அது புதுவிதமாக இருந்ததால் அனைவரும் விரும்பி ரசித்தனர்.
பாலிவுட்டில் வெற்றியை அடைவது சாதாரண விஷயமல்ல. அங்கு ஜெயிப்பது என்பது ஒருவரது மகத்துவத்தை அளவிடும் அளவுகோல். அப்போது எல்லாம் இளையராஜா ஒரே நாளில் 3 பாடல்களைப் பதிவு செய்து விடுவாராம். ஒன்றரை நாளில் ஒரு படத்தின் பின்னணி இசையைக் கோர்ப்பது என்பது இதுவரை எந்த இசை அமைப்பாளரும் செய்யாத சாதனை.
ஒரு படம் அதன் சூட்டிங் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே நல்ல விலைக்கு விற்கப்படுகிறது என்றால் அதற்கு இளையராஜாவின் கால்ஷீட்டே போதும். இதற்கு இணையானவர் நடிகர்களில் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான்.
அந்தக் காலத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்கள் அனைவரும் இளையராஜாவை எப்படியாவது தங்கள் திரைப்படங்களுக்கு இசை அமைக்க சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் குவிந்தனர்.
இந்திய சினிமாவின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சிஎன்என்-ஐபிஎன் அமைப்பு கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இது இந்திய செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் ஆங்கில மொழி செய்தி சேனல். அதன்படி, இந்திய சினிமாவின் இசை அமைப்பாளர் இளையராஜா 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் ஆஸ்கார் நாயகனான ஏ.ஆர்.ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அதே போல இந்திய சினிமாவின் 100 ஆண்டு கால வரலாற்றில் கமல் நடித்த நாயகன் தான் சிறந்த திரைப்படம். சிறந்த இசை அமைப்பாளர் இளையராஜா. சிறந்த நடிகை ஸ்ரீதேவி.