Connect with us
Ilaiyaraja, Rajni

Cinema History

யாரா இருந்தாலும் சரி!.. நான் பாட மாட்டேன்… ரஜினி பாடலை மறுத்த இசைஞானி..

இளையராஜா ஒவ்வொரு நடிகருக்கும், இயக்குனருக்கும் என தனித்தனியாக அவரவருக்கு ஏற்ப எப்படி இசையைக் கொடுப்பது என்று ஒரு முறை வைத்துள்ளாராம். பாரதிராஜா, இயக்குனர் மகேந்திரன், பாலசந்தர், ராஜ்கிரண், ராமராஜன் என இப்படி நிறைய பேரைச் சொல்லலாம். அந்த வகையில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருடன் இளையராஜா கூட்டணி என்றால் பிரமாதமாக இருக்கும். படமும், பாடலும் மெகா ஹிட்டாகும்.

இவரது பெரும்பாலான படங்களில் இளையராஜாவே ஒரு பாடலையும் பாடியிருப்பார். உறுதி மொழி படத்தில் ஒரு சோகப்பாட்டைப் பாடியுள்ளார். அதே போல கிழக்கு வாசல் படத்தில் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்… பாடல். சின்னக்கவுண்டர் படத்துல கண்ணுபட போகுதய்யா, பொன்னுமணி படத்தில் ஏ வஞ்சிக்கொடி பாடல் என சொல்லிவிடலாம். ஆனால் எஜமான் படம் ஆர்.வி. உதயகுமார், இளையராஜா கூட்டணி தான். இந்தப்படத்துல இளையராஜா பாட வேண்டிய ஒரு பாடலைப் பாடாமல் மலேசியா வாசுதேவனை வைத்துப் பாட வைத்தாராம். அது ஏன்னு பார்ப்போம்.

எப்பவுமே டைட்டில் சாங்னா அதை இளையராஜா தான் பாடுவாரு. இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பிரமாதமா பாடியிருப்பாரு. இளையராஜா ரஜினியோட ஓபனிங் சாங் என்பதால் மேளம், உருமி, செனாய், புல்லாங்குழல்னு எல்லா கருவிகளையும் வைத்து ரொம்பவே மாஸா மியூசிக் போட்டுருப்பாரு..

Yejamaan song

Yejamaan song

இந்தப் பாடலில் ஊருல வாழற ஒரு மனுஷனைக் கடவுளுக்கு நிகரா மரியாதைக் கொடுத்து வரிகளை எழுதிருப்பாங்க. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ரஜினியைத் தான் ஊரு கடவுள்னு சொல்லும். அதுக்கு ஒரு வரி இந்தப் பாடலில் இருக்கும். எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்…

இளையராஜாவைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர். கடவுளைக் கும்பிட்டு திருநீறையோ அல்லது திருமண்ணையோ எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வார். இளையராஜாவுக்கு இந்தப் பாடலில் உள்ள வரிகளில் உடன்பாடு இல்லை. தனி மனிதனின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பதாக எழுதப்பட்டுள்ளது. அதனால அவர் பாடுறதுக்கு தவிர்த்தாராம். இது ரஜினி படம் என்பதால் மட்டுமல்ல.

இதுல வேறு யாரு நடிச்சிருந்தாலும் தவிர்க்கத்தான் செய்வார். ஏன்னா இவரைப் பொருத்தவரை தனிமனிதனை வணங்குபவர் கிடையாது. கடவுளை மட்டுமே வணங்குவாராம். தனிமனிதனை வணங்கினால் மட்டும் கூட பரவாயில்லை. காலடி மண்ணை எடுத்து பொட்டு வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர். அதனால தான் இளையராஜா இந்தப் பாடலைப் பாட மறுத்தாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top