எதுவோ தப்பு நடக்க போகுது!... ஒரு மாசத்துக்கு முன்னரே கணித்த இளையராஜா…

by Akhilan |
எதுவோ தப்பு நடக்க போகுது!... ஒரு மாசத்துக்கு முன்னரே கணித்த இளையராஜா…
X

Ilayaraja: தமிழ் சினிமாவின் இசைஞானியின் ஒரே செல்ல மகளான பவதாரிணியின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்த பேரிழப்புகளால் கோலிவுட்டே ஆட்டம் கண்டு இருக்கும் நிலையில் குடும்பத்தில் எதுவோ சரியில்லை என்பதை ஒரு மாதத்துக்கு முன்னரே இளையராஜா கணித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

செண்டிமெண்ட்டாக எதுவோ தப்பாக படுவதை இளையராஜா உணர்ந்தாராம். அதுவும் பண்ணைப்புரத்தில் இருக்கும் தன் மனைவி மற்றும் மனைவி கல்லறைக்கு சென்று இந்த வருடம் தரும் திதியை தர முடியாமல் போய் விட்டதாம். அதுவே இவருக்கு பயத்தினை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: அவங்க சும்மா இருந்தாங்க!… பேட்டி கொடுத்து மறுபடியும் அசிங்கப்படும் நிக்சன்… கழுவி ஊத்திட்டு இருக்காங்கப்பா

கார்த்திகை திருநாளில் இளையராஜாவின் வீடு எப்போதுமே விளக்குகளால் ஜொலிக்கும். ஆனால் இந்த முறை லைட் போட கூட ஆள் இல்லாத நிலை இருந்ததாம். அப்படி இளையராஜாவின் மனம் அறித்து கொண்டு இருந்த பயத்தினை உண்மையாக்கும் விதமாக அடுத்த சில தினங்களில் பவதாரிணிக்கு கல்லீரல் புற்றுநோய் என்ற தகவல் வெளியாகிறது. இதை கேட்ட இளையராஜா உடைந்து போய்விட்டாராம்.

பவதாரிணியின் உடல் நிலை கீமோதெரபிக்களுக்கு செட்டாகாது என்பதால் இனி என்ன செய்யலாம் என்று யோசனை எடுக்கவே இலங்கை ஆயுர்வேதா மருத்துவமனை சென்று இருக்கின்றனர். அங்கு இளையராஜாவும் ஒரு இசை கச்சேரிக்கு செல்ல வேண்டி இருந்ததால் மகளுடன் கிளம்பினாராம்.

இதையும் படிங்க: என் அப்பாவும் அஜித் அப்பாவும் அப்பல்லோல இருந்தப்போ.. மனிதம் உள்ள ஆளு சார் அவரு! நெகிழவைத்த பதிவு

Next Story