வழக்கமான பார்முலாவை உடைத்த இளையராஜா பாடல்… அடடே அது சூப்பர்ஹிட்டாச்சே!

by sankaran v |
ilaiyaraja
X

ilaiyaraja

Ilaiyaraja: தமிழ்த்திரை உலகில் இசைஞானி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் இளையராஜா. 80களில் இசை ராஜாங்கமே நடத்தியவர் என்றால் மிகையில்லை. அவரது பாடல்கள் எல்லாமே தேனமுதுதான். இங்கு ஒரு வித்தியாசமான பாடல் பற்றிப் பார்ப்போம்.

வழக்கமான பார்முலாவை மீறி இளையராஜா செய்த பாடல் தான் இது. இளையராஜாவின் தயாரிப்புல வெளியான ராமராஜன் படம் புதுப்பாட்டு. இந்தப் படத்தில் 'நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம்' என்ற பாடல். இன்னைக்கு உள்ள புதுப்படத்துக்குக் கூட இந்தப் பாட்டைப் போடலாம். கங்கை அமரன் எழுதிய பாடல் தான் இது.

இந்தப் பாடலில் எந்த வார்த்தையை வேணாலும் போட்டு ஃபில் பண்ணிடலாம். அப்படி பண்ணிருப்பாரு கங்கை அமரன். இந்தப் பாட்டோட மெட்டுல ஒரு புதுமையை பண்ணியிருப்பாரு. முதல்ல கொஞ்சம் கொஞ்சமா ராகத்தை ஏத்தி கடைசியில உச்சபட்சம் கொண்டு போய் திரும்பவும் மெதுவா போகும். இந்தப் பாடல் முழுவதும் கிட்டார் புகுந்து விளையாடும்.

ஒரு பாடலைப் பொருத்தவரை 2வது இடையிசையில் ஒரு அமைதி இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் அமைதியே இருக்காது. இன்னொரு சிறப்பு என்னன்னா ஒரு பாடலில் முதல் இடை இசை ஒரு மாதிரியாகவும், 2வது இடை இசை வேறு மாதிரியாகவும் இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்தப் பாடலில் இளையராஜா மெட்டல் கிட்டார் பயன்படுத்தி இருப்பாரு. அந்த வகையில் அவர் மரபாக ஒரு இசையை பண்ணுவாரு. அந்த வழக்கமான பார்முலாவை உடைத்த பாடலாகத்தான் இது இருக்கிறது.

இந்தப் பாடலில் வரும் கித்தார் இசை நம்மை தாளம் போட வைக்கிறது. இளையராஜா, சித்ராவின் குரல் அருமை. இந்தப் பாடலில் ராமராஜனையும், வைதேகியையும் பார்த்துத் தான் ரசிக்க முடியும்னு இல்லை. பார்க்காமலேயே கேட்கும்போதே ரசிக்கலாம். கிட்டத்தட்ட வெளிநாட்டுல போய் ராமராஜன் இல்ல. யாரோ ஒருத்தர் பாடுற மாதிரியான பாட்டா இருக்கும். நல்லா ரசிக்கணும்னு நினைக்கிறவங்க பாட்டைக் கேட்டுப் பாருங்க என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

Next Story