Connect with us
ilai

Cinema History

இளையராஜாவின் குரலில் உருவான எம்ஜிஆர் பாடல்! இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம்..

MGR – Ilaiyaraja: எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் அமைந்த பாடலை பாடிய பெருமை டி.எஸ்.சௌந்தராஜனையே சேரும். கம்பீரமான குரலில் டி.எம்.எஸ் பாடும் போது அச்சு அசலாக எம்ஜிஆர் பாடியதை போன்றே இருக்கும். எம்ஜிஆருக்கும் மட்டுமில்லாமல் வேறெந்த நடிகருக்கு டி.எம்.எஸ் பாடினாலும் அவர்களுக்கு ஏற்ற வகையில் தனது குரலை மாற்றி பாடுவதில் வல்லமை பெற்றவர் சௌந்தராஜன்.

1978 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசின் ஒப்புதல்லோடு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார் எம்ஜிஆர். அந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல் என அனைத்து பொறுப்புகளையும் வாலியிடமே கொடுத்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை பார்த்தால் ஒரே ஒரு கேள்வியை கண்டிப்பா கேட்கனும்! நடிகை சங்கீதாவின் நீண்ட நாள் ஆசை

ஆனால் வாலிக்கு ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு எப்படி சினிமாவில் நடிக்க முடியும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மறுநாளே பேப்பரில் அப்போதைய பிரதமர் எம்ஜிஆர் படங்களில் நடிப்பதில் தனக்கு முரண்பாடு எதுவும் இல்லை என்று கூறியதாக செய்திகளில் வெளியானது.

அதன் பிறகுதான் முழு நம்பிக்கையுடன் கதை எழுத தொடங்கினார் வாலி. கதை தயாரானதும் எம்ஜிஆரிடம் வந்து கொடுக்க அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த கதைக்கு ‘உன்னை விட மாட்டேன்’ என்ற தலைப்பையும் வாலி கொடுத்தார்.

இதையும் படிங்க: லிவிங்ஸ்டனை கண்ணீர் விட வச்ச இளையராஜா…. ஆனால் அந்த பாட்டையே ஹிட்டாக வச்ச பிரபல இசையமைப்பாளர்…

இந்தப் படத்திற்கு இளையராஜாவை இசையமைக்குமாறு வாலியிடம் எம்ஜிஆர் சொல்ல அதன் படியே ரிக்கார்டிங்கும் ஆரம்பமானது. எப்போதுமே எம்ஜிஆர் தன் படங்களில் ரிக்கார்டிங் நடக்கும் போது தவறாமல் அதில் கலந்து கொண்டு எதாவது மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லி திருத்தச் சொல்வது வழக்கம். அந்தளவுக்கு ஒரு படத்தின் ஜீவநாடியாக  இருப்பது அந்தப் படத்தின் பாடல்கள் தான் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர் எம்ஜிஆர்.

அன்று இளையராஜா ஒரு பாடலை பாடிக் காண்பித்தார். எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போனது. மறுநாள் அந்தப் பாடலை டி.எம்.எஸ் குரலில் ரிக்கார்டு செய்து எம்ஜிஆருக்கு அனுப்பினார் இளையராஜா. ஆனால் அது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை. திரும்பவும் பாட வைத்து அனுப்பினார். அப்போதும் எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: தொடையழகை காட்டி தொக்கா கவுத்துப்புட்ட தர்ஷா குப்தா!.. கையை தூக்கி சும்மா கிறங்கடிக்கிறாரே!..

அதன் பிறகு மலேசியா வாசுதேவனை வைத்து ரிக்கார்டு செய்து அனுப்பினார். ஆனால் அதுவும் எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை. பேசாமல் நீயே பாடிவிடு என்று எம்ஜிஆர் சொல்ல என் குரல் உங்களுக்கு செட் ஆகாது அண்ணா  என இளையராஜா சொல்லியிருக்கிறார்.

அப்படியெல்லாம் இல்லை. நீதான் பாடவேண்டும் என கட்டளையிட இளையராஜாவே பாடி அதை அனுப்பியிருக்கிறார். இந்த சமயம் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இப்படி பல விஷயங்கள் சுமூகமாக போக ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படம் வளராமல் போனதாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top