Connect with us
actor livingston

Cinema History

லிவிங்ஸ்டனை கண்ணீர் விட வச்ச இளையராஜா.. காப்பாற்றி கரைசேர்த்த பிரபலம்…

Actor Livingston: தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் பூந்தோட்டத்து காவல்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். காமெடி கலந்த வில்லனாக தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார்.

கேப்டன் பிரபாகரன், மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பின் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனகசப்பினால் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது.

இதையும் வாசிங்க:கலக்கிட்ட கண்ணா!. லோக்கியை கொண்டாடிய ரஜினி!. தலைவர் 171 படம் இப்படித்தான் இருக்குமாம்…

லிவிங்ஸ்டன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பை பார்த்து நடிக்க ஆசைப்பட்டு இவர் நடிப்பு கல்லூரியில் மாணவனாய் சேர்ந்துள்ளார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சுந்தரபுருஷன் உள்ளிட்ட சில திரைப்படங்களின் மூலம் கதாநாயகனாகவும் வலம் வந்தார். வில்லனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.

இவர் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சுந்தரபுருஷன். இப்படத்தினை இயக்குனர் சபாபதி இயக்கினார். லிவிங்ஸ்டன்தான் இப்படத்தின் கதையாசிரியரும் கூட. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்பா நடித்திருந்தார். மேலும் இப்படத்தி வடிவேலு, விணு சக்ரவர்த்தி, வடிவுக்கரசி போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி தயாரித்தார்.

இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனை படக்குழுவினர் தேர்வு செய்திருந்தனர். ஆனால் லிவிங்ஸ்டன் விஸ்வநாதன் வேண்டாம். இக்காலத்திற்கு ஏற்றாற்போல் இசையமைக்க இளையராஜாவிற்கு மட்டுமே முடியும் என கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் அதெல்லாம் வேண்டாம் என கூறி மறுத்துவிட்டாராம். பின் லிவிங்ஸ்டனும் சென்றுவிட்டாராம்.

இதையும் வாசிங்க:அடக்கொடுமையே!.. ரஜினி ஜோடியாக நடிச்சிட்டு இப்படி சீரியல் பக்கம் வந்துட்டாரே.. அந்த பிரபல நடிகை!..

பின் ஒரு நாள் அவருக்கு இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இயக்குனரை சந்தித்த லிவிங்ஸ்டனிடம் இளையராஜாவிடம் நாங்கள் யாரும் பேச மாட்டோம்…நீங்கதான் அவரிடம் பேச வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். லிவிங்ஸ்டனும் சரி என கூறி இளையராஜாவிடம் சென்றுள்ளார். ஆனால் இளையராஜா லிவிங்ஸ்டனை திட்டிவிட்டாராம். நான் சரி என சொல்லாமல் நீ எப்படி நான் இசையமைப்பேன் என கூறலாம்… நான் இசையமைக்க முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.

அப்போது அவர் மிகுந்த வருத்தத்துடன் அழுதுள்ளார். பின் இப்படத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி லிவிங்ஸ்டனிடம் போனில் கவலைபடாதே… இளையராஜா இல்லையென்றால் என்ன அதற்கு பதிலாக சிற்பியை இசையமைக்க சொல்லலாம் என கூறியுள்ளார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் லிவிங்ஸ்டனுக்கும் பெரிய அளவில் இஷ்டம் இல்லாமல் இருந்தாலும் பாடல் வெளியான பின் லிவிங்ஸ்டன் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். இவரின் இசையை நாம் சுந்தர புருஷன் திரைப்படத்தில் காணலாம்.

இதையும் வாசிங்க:நடித்த படம் வேற.. வெளிவந்த படம் வேற! வினுசக்கரவர்த்தி கதையில் கமல் நடித்த படத்திற்கு வந்த சோதனை

google news
Continue Reading

More in Cinema History

To Top