ஏஐ இசையில உருவான எஸ்பிபி பாட்டு எப்படி? இளையராஜா சொன்ன வேறலெவல் பதில்!

by sankaran v |   ( Updated:2025-04-06 11:30:11  )
ilaiyaraja
X

ilaiyaraja

ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் இன்று பல துறைகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. அது இசையையும் விட்டு வைக்கவில்லை. மறைந்த பிரபலங்களின் வாய்ஸ்களை ஏஐயில் கொண்டு வருகிறார்கள். எஸ்பிபி, பவதாரிணி வாய்ஸ்ல கூட ஏஐ தொழில்நுட்பத்துல பாடல்கள் வந்துவிட்டன.

அந்தவகையில் இசைஞானி இளையராஜாவிடம் ஏஐ ல கொண்டு வர்ற பாட்டு மற்றும் மியூசிக் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி கேட்டனர். அதற்கு இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.

ஏஐ அப்படின்னா கனவுக்குள்ள கனவு காணுற மாதிரி தான். கனவுக்குள் ஏது கனவு? அப்படி காண முடியுமா? அதான் அப்பவே கனவுக்குள் ஏது கனவுன்னு பாடிருக்கான். நம்ம உடம்புல மூளைன்னு ஒண்ணு இருக்கு. அது சொல்றதைத் தான் எல்லா உறுப்புகளும் கேட்குது. அது சொன்னபடி தான் நடக்குது. அப்படி இருக்கும்போது நாமே ஒரு ஏஐ தொழில்நுட்பம் தான்.

ilaiyarajaஅப்படி இருக்க நாமே இன்னொரு ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குறோம். அப்படின்னா அது எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. அங்கே மனுஷனோட கன்ட்ரோல் இல்லாம அது தனியா இயங்குமா? நம்மோட ஏஐ இன்னொரு ஏஐ யை உருவாக்குனால் அது எப்படி இருக்கும்? அதுல இருந்து வர்ற பாட்டும், மியூசிக்கும் நல்லாருக்கான்னு நீங்க தான் சொல்லணும். அதை நீங்க தான் கேட்குறீங்க. நீங்க தான் சொல்லணும். அந்த வகையில மனுஷன் ஆர்டர் போட்டாதான் ஏஐ அப்படிங்கற தொழில்நுட்பமே வேலை செய்யும்.

அப்படி இருக்கும்போது ஏஐல வர்ற எஸ்பிபி வாய்ஸ் எப்படி இருக்குன்னு கேட்டா அது நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும் என்கிறார் இசைஞானி இளையராஜா. அதே நேரம் என்னதான் இசையைப் பற்றி நல்லா படிச்சிட்டு அதை வெறும் கீபோர்டுல மட்டும் பண்ணினா அது பெரிய திறமை கிடையாது.

இப்ப உள்ள இளைஞர்கள் எல்லாரும் ஏஐ மாதிரி அந்த மியூசிக்கைத்தான் பண்றாங்க. ஆனா பிரமாதமா இருக்கு. அந்த திறமையை இன்ஸ்ட்ரூமென்ட்ஸை இசைக்குறதுலயும் காட்டுனா அதுதான் ஆரோக்கியமான விஷயம் என்றும் சொல்கிறார் இளையராஜா.

Next Story