பிளாஷ்பேக்: மணிரத்னம் அப்படி கேட்டதும் 'ஷாக்' ஆன இளையராஜா… அப்புறம் உருவான சூப்பர்ஹிட் பாடல்

by sankaran v |   ( Updated:2025-04-07 01:03:11  )
ilaiyaraja, manirathnam
X

ilaiyaraja, manirathnam

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பல படங்கள் அவரது ஸ்டைலுக்காகவே பட்டையைக் கிளப்பும். அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டான படம்தான் தளபதி. மம்முட்டியுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த படம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பும் ரகங்கள். இந்தப் படத்தின் பாடல் ஒன்றை இளையராஜா நினைவுபடுத்துகிறார்.

அப்போது அவரிடம் மணிரத்னம் என்ன சொன்னார் என்றும் அதற்கு இளையராஜா செய்தது என்ன என்பது பற்றியும் இப்படி தெரிவித்துள்ளார். அந்தப் பாடலுக்கு கம்போசிங் நடந்தது. அதுக்கு முன்னாடியே மணிரத்னம் பாடல் ஸ்பீடா போகும்போது இடையில் ஹீரோயின் ஒரு விளக்கு ஏந்தி வரணும். அப்போ ஏதாவது ஒரு பதிகம் பாடுறாப்ல இருக்கணும்னு சொன்னாரு.

அதை நான் மறந்துட்டேன். திடீர்னு ஞாபகம் வந்தது. உடனே என்ன செய்றதுன்னே தெரியல. அங்க இருக்குற இசைவாசிப்பாளர்களிடம் உங்களுக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் பாடல் ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்கன்னு கேட்டேன். அப்போ ஒருத்தரு தேவாரத்துல இருந்த குனித்த புருவமும் பாடலைச் சொன்னார்.

rakkamma songஅதை அப்படியே எழுதிக் கொடுங்கன்னு கேட்டேன். அப்படி எழுதிக் கொடுத்ததும் அதைக் கோரஸை வரச் சொல்லிப் பாட வச்சேன். அதுக்குப் பிறகு மீண்டும் ராக்கம்மா பாடல் வரும். அந்தப் பாடலை பம்பாயில் கம்போசிங் பண்ணினேன். அங்க இருந்த இசைக்கலைஞர்கள் எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம் என்று இளையராஜா சொன்னார். உண்மையிலேயே அவர் இசைஞானிதான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதுபோன்று அவரது இசைவாழ்வில் நடந்தது ஒன்று இரண்டல்ல. ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் தளபதி. ரஜினி, மம்முட்டி, அரவிந்தசாமி, ஷோபனா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் ராக்கம்மா, மார்கழிதான், சுந்தரி கண்ணால் ஒரு, காட்டுக் குயிலு, சின்னத்தாயவள் உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

Next Story