எனக்கு அடுத்த பயலுக எல்லாம் கோடி கோடியா சம்பாதிக்கிறான்! இளம் தலைமுறைகளுடன் மல்லுக்கு நிக்கும் இசைஞானி

by Rohini |
ilai
X

ilai

தமிழ் திரையுலகில் இசைத்துறையில் மிகப்பெரிய ஞானியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் தொடங்கி விடுதலை படம் வரைக்கும் இவரின் இசை நம் காதுகளை துளைத்துக் கொண்டே இருக்கின்றது. அனிருத், யுவன் சங்கர் ராஜா என இப்போதுள்ள தலைமுறைகளுக்கும் டஃப் கொடுத்துக் கொண்டு வருகிறார்.

இவரின் இசையில் எண்ணற்ற பாடல்களை கேட்ட நமக்கு இன்னும் இவரின் பயணம் தொடர வேண்டும் என்றே நினைக்க தூண்டும். அந்தளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் இளையராஜா.

இதையும் படிங்க: விஜயை தொடர்ச்சியாக இயக்க காத்திருக்கும் டாப் இயக்குனர்கள்.. அப்போ அரசியல் எண்ட்ரி அம்போவா! என்னப்பா இது!

அதுவும் நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தார் இளையராஜா. விடுதலை படத்திற்காக அவர் போட்ட அத்தனை பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

80களில் எப்படி கொண்டாடினார்களோ அந்த மாதிரியான ஒரு வரவேற்பை விடுதலை படத்திற்கு கொடுத்தார்கள் ரசிகர்கள். இதன் காரணமாகவே ஏராளமான தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் என இளையராஜாவின் வாசல் முன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் இளையராஜாவோ ஒரு கோடி கொடுத்தால் மட்டுமே பாட்டு என்று கறாராக சொல்லிவிட்டாராம். மேலும் அவருக்கு அடுத்து வந்த அனிருத், யுவன் சங்கர் ராஜா, ரஹ்மான் என இவர்களே கோடியில் புரளும் போது இசைஞானியான இளையராஜா கோடிக் கணக்கில் கேட்கமாட்டாரா? என்றே கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : அங்க சுத்தி இங்க சுத்தி… ஷாருக்கான் தலையிலே கை வைத்த மீடியா… அடே எப்படி தெரிது என்னப்பாத்தா?

ஆனால் அதற்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கிறதாம். இளையராஜாவின் பாடல்களை பொறுத்தவரைக்கும் ஆடியோ ரைட்ஸ் குறைவான விலைக்கே விற்கப்படுகிறதாம். ஆனால் அனிருத், ரஹ்மான் போன்றவர்களின் ஆடியோ ரைட்ஸ் அதிகளவில் விற்பனையாகின்றதாம்.

அதனாலேயே இவர்களுக்கு அதிகமான சம்பளத்தை கொடுத்து தயாரிப்பாளர்கள் ஆடியோ ரைட்ஸில் பணத்தை அள்ளி விடுகிறார்களாம். ஆனால் இளையராஜாவிற்கு அப்படி பண்ண முடியாது என்று சொல்கிறார்கள்.

Next Story