டிஎம்எஸ், இளையராஜா பிரிந்ததுக்கு இதுதான் காரணமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

tms ilaiyaraja
1976ல் இளையராஜா இசை அமைக்க வருகிறார். அடுத்த வருஷமே சிவாஜியின் தீபம் படத்துக்கு இசை அமைக்க வாய்ப்பு வந்தது. சிவாஜியின் படங்களுக்கு வரிசையாக இசை அமைத்து வந்தவர் எம்எஸ்.விஸ்வநாதன். தீபம் படத்துக்கு முன்னால 50 படங்கள் வரை இசை அமைத்தவர் அவர்தான். நாலஞ்சு படங்கள் மட்டும் கேவி.மகாதேவன் மற்றும் ஒரு சிலர் தான். கே.பாலாஜி தயாரித்த படங்கள் எல்லாம் எம்எஸ்.வி.தான் மியூசிக்.
1977ல் தான் தயாரித்த தீபம் படத்துக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என இளையராஜாவை இசை அமைக்க வைக்கிறார். இது இளையராஜாவின் 11வது படம். இதற்குள்ளாகவே பத்ரகாளி, பதினாறு வயதினிலே என பல ஹிட்டுகளைக் கொடுத்தவர் இளையராஜா.
தீபம் படத்துக்கு இளையராஜா நல்லாவே இசை அமைத்து இருந்தார். அதுக்கு முன்னாலேயே எம்எஸ்வி., எஸ்பிபி, யேசுதாஸைப் பாட வைத்தார். இளையராஜா டிஎம்எஸ்ஸைப் பாட வைத்தார். அவரிடம் ஒரு பிடிவாத குணம் உண்டு. இந்தப் பாட்டை இப்படித்தான் பாடணும்னு அவரு பாணில போவார். வசந்தமாளிகையில எக்கோ வச்சாதான் யாருக்காக பாடலைப் பாடுவேன்னு பிடிவாதமா சொன்னார்.

கலைஞர்கள்னா சின்ன சின்ன பிரச்சனை இருக்கத்தானே செய்யும். நான் வாழ வைப்பேன் படத்துல எந்தன் பொன்வண்ணமே பாடலை டிஎம்எஸ் அற்புதமாகப் பாடினார். என்னோடு பாடுங்கள் பாடலையும் பாட வைத்தார். ஆனால் அது இளையராஜாவுக்குத் திருப்தி இல்லை. அதனால் எஸ்பிபியை வைத்துப் பாட வைத்தார். இளையராஜா, டிஎம்எஸ்க்கு இடையில் சில சங்கடங்கள் இருந்துக்கிட்டுதான் இருந்தது.
1986ல் பெரிய வெடியா வெடிச்சது. தாய்க்கு ஒரு தாலாட்டு படம் என்ற படத்தில் டிஎம்எஸ் பாடும் விதத்தில் இளையராஜா கரெக்ஷன் சொன்னார். அது டிஎம்எஸ்சுக்குப் பிடிக்கல. ஆனா எப்படியோ பாடி முடிச்சிட்டாரு. ஆனா படத்துல அந்தப் பாட்டு வரல. இதை இளையராஜா வேண்டாம்னு சொல்லிட்டாரா என்னன்னு தெரியல. அதோட அவங்க பிரிஞ்சதுதானாம். ஹைபிட்ச்ல பாடிப்பாடி காதுகேளாத தன்மை டிஎம்எஸ்சுக்கு வந்துடுச்சாம். இதனால் பல சமயங்களில் கோபம், பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருந்ததாம்.