
Flashback
இளையராஜா இசையில் திரைக்கு வராத சூப்பர்ஹிட் பாடல்கள்… லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே!
இசைஞானி இளையராஜாவின் இசையில் திரைக்கு வராத இனிய பாடலகள் பல உள்ளன. ஆனால் நாம் இந்தப் பாடல்களை எல்லாம் பலமுறை ரேடியோவில் கேட்டிருப்போம். என்ன படம்னுதான் தெரியாது. வாங்க பார்க்கலாம்.
சட்டம் என் கையில் படத்தில் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ பாடல். இது மலேசியாவாசுதேவனும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய சூப்பர்ஹிட் மெலடி பாடல். மகேந்திரன் கைவிட்ட ‘மருதாணி’ என்ற படத்துக்காக இளையராஜா போட்ட பாடல். அது கைவிடப்பட்டதால் அந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெற முடியாமல் போனது. அந்தப் பாடலை நான் பயன்படுத்திக்கிறேன்னு பாரதிராஜா கேட்டாராம்.
அதை அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக வைக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அந்தப் பாடலைப் பயன்படுத்த படத்தில் காட்சிகள் இல்லை. அதனால் அதிலும் வரவில்லை. ஆனால் கேசட்டுகளில் அந்தப் பாடல் இடம்பெற்றது. நாயகியின் அறிமுகக் காட்சிக்கு இந்தப் பாடலைப் பயன்படுத்தலாம். அதுதான் ‘புத்தம்புது காலை’ என்ற பாடல். அப்போது ஜானகி பாடினார்.
இப்போது இது அனிதா கார்த்திகேயன் பாடி மேகா என்ற படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2014ல் வந்த இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜாதான். அடுத்ததாக இளையராஜாவின் சொந்தத் தயாரிப்பில் வெளியான படம் ராஜாதி ராஜா. இந்தப் படத்தில் வரும் இந்தப் பாடலை சித்ராவும், சுசீலாவும் பாடிய பாடல். ‘உன் நெஞ்சைத் தொட்டுச் சொல் என் ராசா’ என்ற பாடல் தான் அது.
கமல் நடிப்பில் ஆரம்பத்தில் வந்த விக்ரம் படத்தில் சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது பாடல். அதே நேரத்தில் ‘வனிதா வனி’ என அந்தப் பாடலும் தயாராக இருந்தது. அது கதைப்படி தேவையாக இருந்ததால் அந்தப் பாடலை வைத்து விட்டார்கள். ‘சிப்பிக்குள் ஒரு முத்து’ பாடல் இடம்பெறாமல் போனது. அமைதிப்படை படத்தில் வரும் ‘சொல்லிவிடு வெள்ளி நிலவே’ பாடல். இது ரொம்ப அருமையான ஒரு பாடல். ஆனா யூடியூப்ல படத்தோட சில காட்சிகளை மிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்க.

amaithipadai song
அரண்மனைக்கிளி படத்தில் நகைச்சுவை காதல் பாடல் ஒன்று வராமல் போனது. ‘புலிமேலே காதல் குறியை’ என்ற பாடல். தளபதி படத்தில் ‘புத்தம் புது பூ பூத்ததோ’ பாடல், புதிய ஸ்வரங்கள் படத்தில் ஜேசுதாஸ், உமாரமணன் பாடிய பாடல் ‘காலம் உள்ள காலம் மட்டும் வாழும்’ இந்தப் பாடல் வராமல் போனது. இதை இளையராஜாவும், யேசுதாஸ்சும் பாடி இருப்பார்.
பூவரசன் படத்துல வரும் மெலடி பாடல். ‘ராசாத்தி ராசாத்தி’ என்ற பாடல்தான் அது. நாடோடித் தென்றல் படத்தில் ‘ஒரு கணம் ஒரு யுகமாக’ என்ற பாடல்தான் அது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் ‘ஆடிப்பட்டம் தேடிச் சன்னல் விதைபோட்டு’ என்ற பாடல். அதே போல தேவர்மகன் படத்தில் வரும்