Cinema History
கடைசி நேரத்தில் வரிகளை மாற்றிய கங்கை அமரன்!.. கடுப்பாகி கத்திய இளையராஜா!…
Ilayaraja: இளையராஜா எப்போது சினிமாவுக்கு வந்தாரோ அப்போது அவருடன் சினிமாவில் பயணிக்க துவங்கியவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் இசையமைப்பதில் மட்டுமல்ல. பாடல்கள் எழுதுவதிலும் கில்லாடி. பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர்.
அவர் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் போல ஒரு ஹிட் படம் போல் இப்போது வரை திரையுலகில் வெளிவரவில்லை. இளையராஜாவின் இசையில் பல வெற்றிப்பாடல்களை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். பாடியும் இருக்கிறார். மௌன கீதங்கள், சுவரில்லா சித்திரங்கள், வாழ்வே மாயம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: நான் ஒன்னு நினைச்சேன்!.. அது ஒன்னு நடந்துபோச்சி!.. பலவருடங்கள் கழித்து புலம்பும் முருகதாஸ்..
இளையராஜாவின் வளர்ச்சிக்கு பல வருடங்கள் உறுதுணையாக இருந்தவர் கங்கை அமரன். இளையராஜா மிகவும் கோபக்காரர். பட்டென தயாரிப்பாளரிடமும், இயக்குனர்களிடமும் கோபத்தை காட்டி விடுவார். அப்படி அவர் நடந்து கொண்ட போதெல்லாம் அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே பிரச்சனை பூதாகரமாக மாறிவிடாமல் பார்த்துக்கொண்டவர் கங்கை அமரன்.
ஆனால், தன்னை எதிர்த்து பேசுகிறார்.. தனக்கே அறிவுரை சொல்கிறார்.. தனியாக இசையமைக்க துவங்கிவிட்டார் போன்ற பல காரணங்களால் அவரிடம் கோபத்தை காட்டி அவரை ஒதுக்கி வைத்தவர்தான் இளையராஜா. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: யாரும் கூட இல்ல!..இப்படி ஒரு வாழ்க்கை இளையராஜாவுக்கு தேவையா?!.. பகீர் கிளப்பும் கங்கை அமரன்…
சின்னத்தம்பி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு ‘அரண்மனைக்கிளி அழகு பைங்கிளி தரையில் வந்ததடி’ என்கிற பல்லவியை சொல்லிவிட்டு ‘மீதி பாடலை நீ எழுதிவிடு’ என என்னிடம் சொன்னார். நான் அதைமாற்றி ‘அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே’ என எழுதினேன்.
எதற்காக பாடல் வரிகளை மாற்றினாய்? என என்னிடம் கத்தினார். நான் ‘இலக்கணப்படி அது சரியாக அமையாது. பாடும்போதும் அசிங்கமாக இருக்கும். அரண்மனைக்கிளி வார்த்தையை பாடும்போது நக்கிளி நக்கிளி என தனியாக தெரியும். அதனால் மாற்றிவிட்டேன்’ என நானும் கோபமாக சொன்னேன். இப்படி நான் பேசுவதெல்லாம் அவருக்கு பிடிக்காது’ அதனால்தான் விலகி போய்விட்டார்’ என கங்கை அமரன் சொல்லி இருந்தார்.