கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்...!

ILA-Vij
மறைந்த கேப்டன் விஜயகாந்த் தமிழ்சினிமாவின் ஒரு பொக்கிஷமாக இருந்தார். இப்போது அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற படங்கள் பொக்கிஷமாகவே நமக்கு இருக்கின்றன. அவரைப் பற்றி நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
88ல சந்தனக்காற்று என்ற படத்தில் டி.சங்கர் ஒளிப்பதிவாளர். நான் அசோசியேட் கேமராமேனாக இருந்தேன். மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், கௌதமி நடித்துள்ளனர். ஊட்டில கேத்தி என்ற கிராமத்தில் தான் சூட்டிங். மூன்றாம்பிறை படத்தில் வந்த ரெயில்வே ஸ்டேஷன் வரும் ஊர். அங்க தான் சூட்டிங்.
இதையும் படிங்க... தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!
மேல தான் ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். அது சாயங்காலம் 6 மணிக்கு முடிச்சிட்டு நைட் 8 மணிக்கு மேட்டுப்பாளையத்துல எங்கிட்ட மோதாதே சூட்டிங். அங்க விடியகாலம் 4 மணி வரை நடக்கும். திருப்பி ஊட்டிக்கு காலைல சூட்டிங் வரணும்.
அப்போ சூப்பர் சுப்பராயன், விஜயகாந்த் கூட்டணியில் பைட் செம மாஸா இருக்கும். ரஜினி சார் ஒரு பக்கம் பயங்கர ஃபீட்ல இருக்காரு. அந்த மரத்துல ஏறி ஒவ்வொரு ஸ்டெப்பாக போட்டு இடுப்பை வளைத்து திருப்பி கீழே விழுந்து ஃபைட் பண்ணும் ஆக்ஷன் சீன். விஜயகாந்த் ஏறி அப்படி அடிக்கும்போது தோள்பட்டை, கைகளில் பலத்த காயம். அப்புறம் சூப்பர் சுப்பராயன் தோள்களை பிடித்து விட்டு சரிசெய்தாராம். அப்போது ஒரு சொடக்கு விழுமாம். 10 நிமிஷத்துல வலி குறைந்ததும், அடுத்த ஷாட் எடுக்கலாமான்னு விஜயகாந்த் கேட்பாராம்.
இதையும் படிங்க... 25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்
சின்ன புரொடியூசர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவராகவே தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையையும் சேர்த்து செய்வார். இதனால் தான் சினிமாவில் நிலைத்து நின்றார். இப்படி இருந்ததால் தான் இவர் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார். இவ்வாறு இளவரசு தெரிவித்துள்ளார்.
சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் டூப் போடாமல் ரியலாக நடிப்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர் பல முறை கீழே விழுந்து காயம்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.