More
Categories: Cinema History Cinema News latest news

28 வருடமாக ரஜினி படங்களுக்கு இசையமைக்காத இளையராஜா… என்னவானது? வெளிவந்த ஷாக் தகவல்…

சூப்பர்ஸ்டார் ரஜினி படத்திற்கு இளையராஜா இசையமைத்து 28 வருடங்கள் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஏன் இந்த கூட்டணி இதுவரை இணையவில்லை என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சகாப்தங்களில் ஒருவர் இளையராஜா. இவரின் இசையில் உருவான எல்லா பாடல்களுமே ரசிக்க வைக்க தவறியது இல்லை. ஒரு காலத்தில் இளையராஜாவிற்கு இணை யாரும் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவில் இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர்.ரஹ்மானை பாலசந்தர் ரோஜா படத்தின் மூலம் கொண்டு வந்ததை தொடர்ந்தே அவருக்கு போட்டியாக அமைந்தார்.

Advertising
Advertising

இளையராஜா – ரஜினி

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். பாலசந்தரை இளையராஜா ஒருமுறை கடுமையாக விமர்சித்து விட்டார். இதையறிந்த பாலசந்தருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டதாம். இதனால் தான் தயாரிக்கும் படங்களில் இளையராஜாவை கமிட் செய்ய அவர் விரும்பவில்லை. அதன் பொருட்டே, ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். ஆனால் அண்ணாமலை படத்தில் இளையராஜா எனக்கு வேண்டாம். ரஜினிக்கு வேண்டும் என்றால் அவரையே கமிட் செய்கிறேன் எனக் கூறினாராம்.

குரு பேச்சுக்கு தாண்டி என்ன என நினைத்த ரஜினிகாந்த். பாலசந்தர் சாருக்கு வேண்டாம் என்றால் எனக்கு வேண்டாம். தேவாவை கமிட் செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டனர். தொடர்ச்சியாக, ரஜினிகாந்தின் மற்ற படங்களில் ஏற்கனவே கமிட் செய்யப்பட்ட பாண்டியன், ஏஜமான், உழைப்பாளி மற்றும் வீரா படங்களில் மட்டுமே இளையராஜா பணியாற்றினார்

வீரா

கடைசியாக 1994ம் ஆண்டு வெளிவந்த வீரா படத்திற்கு பின்னர் எந்த படங்களிலும் இளையராஜாவை கமிட் செய்யவில்லை. பாலசந்தருக்கு தான் என ஒருதரப்பு கூறினாலும் ஏறத்தாழ 28 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அதற்கு காரணம் என்னவென்று தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan