தளபதி 68 படத்துக்கு The Greatest of All Time என முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வெங்கட் பிரபு டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்துக்கு ஹாலிவுட் பாடகர்களை வைத்து யுவன் சங்கர் ராஜா பாடல்களை உருவாக்குவார் என்று பார்த்தால், அதற்கும் மேல் ஒரு சம்பவத்தை பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாக்ஷி சவுத்ரி, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்யின் யங் மற்றும் ஓல்டர் வெர்ஷன் எப்படி இருக்கும் என ஃபர்ஸ்ட் லுக் மூலம் தெரிந்து விட்டது.
இதையும் படிங்க: பிரியங்கா மோகனோட அந்த 20 நிமிஷ ஃபூட்டேஜை காணோம்!.. கதறி அழும் படக்குழு.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?
ஆனால், மற்ற நடிகர்கள் தோற்றம், என்ன மாதிரியான லுக்கில் நடிக்கப் போறாங்க என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் நடிகர் விஜய்யையும் இளையராஜாவையும் ஒன்றாக இணைந்து பாட வைத்து தூள் கிளப்ப உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே முதல் பாடல் ஷூட் செய்யப்பட்டு முடிந்த நிலையில், அந்த பாடலுக்குத்தான் இருவரும் இணைந்து பாடியுள்ளார்களா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் தற்போது அதிகளவில் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித் படத்தில் கமல் செய்த உதவி! அதான் வொர்க் அவுட் ஆயிருக்கு – ஆண்டவர் செஞ்ச மாயம்தானா அது?
லியோ படத்திலேயே வித்தியாசமான விஜய்யை பார்த்த ரசிகர்கள் இனிமேல் வரப்போகும் படங்களில் எல்லாம் மாறுபட்ட விஜய்யைத் தான் காணப் போகின்றனர் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைத்துள்ள நிலையில், இசைத்துறையின் GOAT இளையாராஜா பாடல் இல்லாமல் இருந்தால் எப்படி என வெங்கட் பிரபு தனது பெரியப்பாவையும் களமிறக்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…