Cinema News
மனுஷன் இப்படி மாறிட்டாரே!.. வெற்றிமாறனை எப்படி கூப்பிடுகிறார் தெரியுமா? வாய்பிளக்கும் திரையுலகம்!
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என சொல்வார்கள். இளையராஜாவும் அப்படித்தான். அது அவர் யாருக்கெல்லாம் உதவினாரோ, அவருடன் யாரெல்லாம் நெருங்கி பழகினார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும். இளையராஜா என்றால் மிகவும் கண்டிப்பானவர், கோபக்காரர் என்றுதான் பலராலும் அவர் அறியப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவர் பலருக்கும் உதவி இருக்கிறார். மிகவும் ஜாலியானவர்தான் அவர். பல அறிமுக இயக்குனர்களுக்கு சம்பளமே வாங்காமல் சூப்பர் ஹிட் பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறார். பி.வாசுவும், சந்தானபாரதியும் சேர்ந்து பாரதி வாசு என்கிற பெயரில் எடுத்தபன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு இளையராஜா சம்பளமே வாங்கவில்லை. இத்தனைக்கும் தித்திக்கும் தேனமுதாக இருக்கும் அப்படத்தின் பாடல்கள்.
இதையும் படிங்க: சூர்யா பார்த்தா ஃபீல் பண்ணுவாரு!.. வணங்கானில் இறங்கி அடித்திருக்கும் பாலா!.. வட போச்சே!
அவருக்கு மட்டுமல்ல. பலருக்கும் அப்படி செய்திருக்கிறார். அவரால் பயனடைந்த பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் பாதி சம்பளம் வாங்கி கொண்டு பாட்டு போட்டு கொடுத்திருக்கிறார் இளையராஜா. இப்போது அவர் காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவதால் அவர் ஏதோ காசுக்கு அலைபவர் போல பலரும் சித்திரிக்கிறார்கள்.
அது உண்மையில்லை. ‘பாடல் இசையமைப்பாளருக்கு சொந்தமா?’ இல்லை ‘படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய நிறுவனங்களுக்கு சொந்தமா?’ என்கிற வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வெளியான பின்னரே ஒருமுடிவுக்கு வரமுடியும். இந்நிலையில், இளையராஜா தொடர்புள்ள ஒரு விஷயம் திரையுலகில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இப்ப வாங்கடா எல்லாரும்!.. பாட்டெல்லாம் வேறலெவல்!.. விடுதலை 2-வில் பின்னியெடுத்த இளையராஜா
இளையராஜா இப்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக 4 அற்புதமான பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறாராம் ராஜா. அதோடு, வெற்றிமாறனுடன் அன்போடு பழகி வருகிறாராம். திடீரென அவருக்கு போன் செய்து ‘தோழர் எங்க இருக்கீங்க?’ என கேட்பாராம். வெற்றிமாறன் அவரை ‘சார்’ என்றே அழைத்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் ‘அவர் நம்மை தோழர் என அழைக்குபோது நாம் மட்டும் ஏன் சார் என அழைக்க வேண்டும்?’ என நினைத்த வெற்றிமாறன் இளையராஜாவை ‘தோழர்’ என்றே அழைக்க துவங்கிவிட்டாராம். இளையராஜா இதுவரை யாரையும் இப்படி அழைத்தது இல்லை எனவும், இளையராஜாவை யாரும் இப்படி இதுவரை அழைத்து இல்லை எனவும் வாயை பிளக்கிறது திரையுலகம்.
இளமையான காலத்தில் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தவர்தான் இளையராஜா, அவரின் அண்ணன் பாவலருடன் சேர்ந்து கொண்டு பல கம்யூனிச மேடைகளில் பாட்டு கச்சேரி நடத்தி இருக்கிறார். ஆனால், சினிமாவில் வளர்ந்தபின் ஆன்மிகத்தில் ஈடுபட்டு கம்யூனிச சிந்தனையிலிருந்து அவர் விலகி இருந்தார். ஆனால், இப்போது ‘தோழர்’ என அவர் வெற்றிமாறனை அழைப்பதால் இன்னமும் அவருக்குள் கம்யூனிச உணர்வு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.