சூர்யா பார்த்தா ஃபீல் பண்ணுவாரு!.. வணங்கானில் இறங்கி அடித்திருக்கும் பாலா!.. வட போச்சே!

சேது படத்தை பார்த்த கையோடு இயக்குனர் பாலாவின் அலுவகத்துக்கு ஓடிப்போய் ‘எனக்கும் இப்படி ஒரு படத்தை கொடுங்கள்’ என கேட்டவர்தான் சூர்யா. அதனால்தான் அடுத்து இயக்கிய ‘நந்தா’ படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்தார் பாலா. அந்த படத்தில் நடிக்கும்போது சூர்யாவுக்கு நடிப்பை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், படம் முடியும்போது நிறைய கற்றிருந்தார்.

அந்த படத்தை பார்த்துவிட்டுதான் கவுதம் மேனன் தனது ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். சீரியஸாக மட்டுமல்ல. சூர்யா ஜாலியாகவும் நடிப்பார் என பிதாமகன் படத்தில் காட்டினார் பாலா. பிதாமகன் படத்தில்தான் சூர்யா ஒரு முழு நடிகராக மாறினார். ரசிகர்களுக்கும் அவரை பிடித்துப்போனது.

இதையும் படிங்க: இப்ப வாங்கடா எல்லாரும்!.. பாட்டெல்லாம் வேறலெவல்!.. விடுதலை 2-வில் பின்னியெடுத்த இளையராஜா

அதன்பின் சூர்யா மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஹரியின் இயக்கத்தில் சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி ஹிட் படங்களை கொடுத்தார். என்ன காரணமோ?, அவர் மீண்டும் பாலாவிடம் செல்லவில்லை.

ஆனால், பாலாவுக்கு எல்லாமே இறங்கு முகமாக இருந்தது. விக்ரம் மகனை வைத்து அவர் இயக்கிய ஆதித்ய வர்மா படத்தை தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யவே இல்லை. பாலாவுக்கு கால்ஷீட் கொடுக்க யாருமே தயாராக இல்லை. பாலாவால் வளர்ந்த நடிகர் விக்ரம் கூட பாலாவை கைவிட்டார்.

இதையும் படிங்க: சிம்பு நடிக்க இருந்த மாஸ்ஹிட் படத்தை தட்டிவிட்ட தனுஷ்… இது பொறாமை ப்ரோ…

விஷால், ஆர்யா போன்ற நடிகர்களும் ‘ஐயோ பாலாவா’ என தெறித்து ஓடினார்கள். எனவே, பாலாவுக்கு உதவ முன் வந்த சூர்யா அவருடன் இணைந்து ‘வணங்கான்’ படத்தில் நடிப்பதாக அறிவித்து அப்படத்தை அவரே தயாரித்தார். பாலா எப்போதும் முழுக்கதையோடு படப்பிடிப்புக்கு போகமாட்டார்.. அவரிடம் எந்த திட்டமிடலும் இருக்காது. என்ன தோன்றுகிறதோ அதை எடுப்பார். காட்சி திருப்தி இல்லையென்றால் மீண்டும் மீண்டும் எடுப்பார்.

vanangan

இதில் ஏதோ ஒன்று பிடிக்காமல் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். அதன்பின் அருண்விஜயை வைத்து அப்படத்தை இயக்கினார் பாலா. இப்படத்தின் டீசர் வீடியோவை பார்த்தபோது இன்னொரு பிதாமகன் போலவே இருந்தது. இந்நிலையில், வணங்கான் படம் நன்றாக வந்திருப்பதாகவும், படத்தை பார்த்தால் ‘அட மிஸ் பண்ணி விட்டோமே’ என சூர்யாவே ஃபீல் செய்வார் என திரையுலகில் பேச துவங்கிவிட்டனர். வணங்கான் படம் ஜூலை மாதம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story