இளையராஜாவாக தனுஷ்… டைரக்டர் இவர் தானா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் உருவாக இருப்பதாக பல நாட்களாக தகவல்கள் வெளியானது. இன்று அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்வு நடந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவின் இசைஞானி, இசைகளின் ராஜா என தமிழ் ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் இளையராஜா. என்னதான் கோவக்காரராக இருந்தாலும் அவரின் இசைக்கு அடிபணியாத ரசிகர்களே இல்லை. ராஜா இசை இருந்தால் போதும் என்ற நிலையில் கூட தமிழ் சினிமா ஒரு காலத்தில் இருந்தது.

இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…

அந்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. படத்தை மும்பையை சேர்ந்த கனெக்ட் மீடியா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்னையின் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்தது.

இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். கமல்ஹாசன் பர்ஸ்ட் லுக்கை அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தை பால்கி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இப்படத்தையும் இயக்க இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் இரண்டு மாதம் தொடர்ச்சியாக பயணம் செய்ய இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் எனக்கு இரண்டு பேரின் பயோபிக்கில் நடிக்க ஆசை. ஒன்று ரஜினிகாந்த், மற்றொன்று இளையராஜா. அதில் ஒன்று தற்போது நடந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: என்ன அடுத்த கல்யாணமா? நீங்க உருட்டுறது முழுசுமே தேவையில்லாத ஆணி தான்!

இசையமைப்பை இளையராஜாவே செய்ய இருக்கிறாராம். மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே ரிலீஸாகி இருக்கும் நிலையில் படத்தின் டைட்டில் இளையராஜா என்று வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story