காசெல்லாம் வேண்டாம்; 2 படங்களுக்கு இலவசமாக இசையமைத்த இளையராஜா!..

Published on: May 26, 2023
---Advertisement---

அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. முதல் படத்தில் இருந்தே இளையராஜா இசை அமைத்த முக்கால்வாசி பாடல்கள் ஹிட் பாடல்களாகவே அமைந்துள்ளன.

இளையராஜா இசையமைப்பாளராக இருந்த சமகாலத்தில் அவருக்கு நிகரான இன்னொரு இசையமைப்பாளர் இல்லை என்று கூறலாம். அப்போதைய தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பாட்டுக்காக ஓடிய படங்கள் ஏராளம்.

ilai1
ilayaraja

பல இயக்குனர்கள் இது குறித்து கூறும் பொழுது ”இளையராஜாவின் பிரசாத் ஸ்டுடியோவில் வாய்ப்புக்காக இயக்குநர்கள் வரிசையாக நிற்க வேண்டும் இளையராஜாவிற்கு எந்த இயக்குனரிடம் படம் செய்யப் பிடிக்கிறதோ அவர்களை மட்டுமே அழைப்பார் என்று கூறுகின்றனர்.

ஆனால் பழக்கவழக்கத்திற்காகவே பல பிரபலங்களுக்கு இளையராஜா உதவிகள் செய்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்தவர் சங்கிலி முருகன். பல படங்களில் சங்கிலி முருகன் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இவர் சினிமாவில் இருந்து வருகிறார்.

ilayaraja
ilayaraja

இதனால் இளையராஜாவிற்கும் சங்கிலி முருகனுக்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது.இந்த நிலையில் திரைப்படம் தயாரிப்புகளில் இறங்கலாம் என்று முடிவெடுத்தார் சங்கிலி முருகன். அந்த படங்களில் இளையராஜா இசையமைத்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்தார்.  எனவே அவரது முதல் படமான கரிமேடு கருவாயன் என்கிற படத்திற்கு இசையமைப்பது குறித்து இளையராஜாவிடம் பேச சென்றார்.

இளையராஜா செய்த உதவி:

அந்த திரைப்படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தார். இந்த செய்தியை கேட்டதும் இளையராஜாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில் அப்பொழுது தயாரிப்பாளராக களம் இறங்கிய பலரும் சினிமாவில் தோல்வியை கண்டனர்.

எனவே தனது நண்பனுக்கு அப்படி நடக்க கூடாது என நினைத்தார் இளையராஜா. எனவே இதற்காக அந்த படத்திற்கு இளையராஜா காசே வாங்காமல் இசையமைத்து கொடுத்தார். ”நீ படத்தை முதலில் வெற்றி அடையச் செய். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியவர் அந்த படத்திற்கு இலவசமாகவே இசையமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.

அதற்குப் பிறகு சங்கிலி முருகன் ராமராஜன் நடிப்பில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தை தயாரித்தார் அந்த திரைப்படத்திற்கும் கூட இளையராஜா காசே வாங்காமல்தான் இசையமைத்து கொடுத்தார் இந்த விஷயத்தை சங்கிலி முருகன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் மூன்று பேரை ஏமாற்றிய சம்யுக்தா! வெளியான ஆடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.