Cinema History
இந்த படத்தில இருந்து உன்னை தூக்கிட்டோம்!.. இளையராஜாவுக்கு பறிபோன முதல் பட வாய்ப்பு…
Ilayaraja: தமிழ் சினிமா வரலாற்றை எழுதினால் அதில் இளையராஜாவை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். 70களின் இறுதியில் சினிமாவுக்கு வந்த இளையராஜா ஒருகட்டத்தில் சினிமாவையே ஆண்டார்.
அவரின் இசை இருந்தால் அப்படம் வெற்றி என்கிற நிலையும் உண்டாகி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரின் இசைக்காக தவம் கிடந்தனர். இளையராஜாவும் தனது பாடல்கள் மூலம் பல திரைப்படங்களை ஓட வைத்தார். குறிப்பாக பின்னணி இசை மூலம் இயக்குனர்களின் எண்ண ஓட்டங்களுக்கு உயிர் கொடுத்தார்.
இதையும் படிங்க: இளையராஜாதான் வேணும்… கறாராய் சொன்ன ராமராஜன்… படம் ஓடுறதே பெருசு இதுல கண்டிஷன் வேறயா…
மண்வாசனை மிக்க பல பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்போதும் இவரின் இசைதான் பலரின் மனக் காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. கார், ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது ராஜாவின் வழித்துணையாக உடன் போகிறது.
ஆனால், இதே இளையராஜாவுக்கு சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. சகோதரர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு சினிமாவில் வாய்ப்பும் தேடி வந்தார். அப்படி ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் ராஜாவுக்கு முதல் படம். அவரது ட்யூன்கள் ஓகே செய்யப்பட்டு அடுத்த நாள் ரெக்கார்டிங் என சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!
எனவே இளையராஜா மிகுந்த சந்தோசத்தோடு கோவிலுக்கு போய் சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டு ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார். ஆனால், ‘இந்த படத்திலிருந்து உங்களை தூக்கிவிட்டோம். உங்கள் மெட்டுக்களில் எங்களுக்கு திருப்தியில்லை. வேறு ஒருவர் இசையமைக்கிறார்’ என சொல்ல ராஜா உடைந்து போனாராம்.
அதன்பின் 5 வருடங்கள் கழித்துதான் இளையராஜாவுக்கு அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அவமானங்களை தாண்டி வந்த ராஜா புகழின் உச்சிக்கு சென்று இசையின் சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததுதான் வரலாறு. இளையராஜாவுக்கு முதல் பட வாய்ப்பு பறிபோன அந்த காட்சியை முகவரி படத்தில் அஜித்துக்காக இயக்குனர் வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜா பற்றி மாரிமுத்து ஃபீலிங் காட்டிய தருணம்…