ரோஜா படத்துக்கு ரஹ்மானுக்கு தேசிய விருது!.. இளையராஜா ரியாக்ஷன் என்ன தெரியுமா?...
முதல் படத்திலேயே தேசிய விருது என்பது எல்லோருக்கும் அமையாது. சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்களுக்கு மட்டுமே அது அமையும். இளையராஜாவை விட்டால் ஆள் இல்லை என தமிழ் சினிமா இருந்த போது இசைப்புயலாக வந்து துவம்சம் செய்தவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.
பாலச்சந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படம் உருவான போது அதற்கு இளையராஜாதான் மணிரத்தினத்தின் சாய்ஸாக இருந்தது. ஏனெனில், அப்போது அவரை விட்டால் ஆள் இல்லை. ஆனால், பாலச்சந்தர் மீது இருந்த கோபத்தில் இளையராஜா மணிரத்தினத்திடம் நடந்து கொண்டது பாலச்சந்தருக்கு பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: எப்பவுமே ஹைடெக் தான்! இந்த ஒரு காரணத்துக்காகவா விலகினார்? வெளியான நயன் – சசிகுமார் பட சீக்ரெட்ஸ்
கோபத்தில் அவர் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜாவுக்கு எதிராக ஒரு இசையமைப்பாளரை கொண்டு வர வேண்டும் என பாலச்சந்தர் நினைத்தார். அப்போது விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்தார் ரஹ்மான். அவரின் ஸ்டுடியோ, அவரிடம் இருந்த இசைக்கருவிகள் இதையெல்லாம் பார்த்துவிட்டு சம்மதம் சொன்னார் மணிரத்னம்.
அப்போது ரஹ்மானுக்கு வயது 25. ரோஜா படத்துக்கு அவர் கொடுத்த இசையை யாராலும் மறக்க முடியது. இசையில் ஒரு புதிய ஒலியை, அதிர்வை ரசிகர்கள் உணர்ந்தார்கள். வெஸ்டர்ன் இசையில் பின்னியெடுத்தார் ரஹ்மான். அப்படத்தில் அவர் போட்ட ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. ‘காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே’ பாடல் காதலின் பிரிவை உணர்த்தியது.
முதல் படத்திற்கே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் ரஹ்மான். அவருக்கு போட்டியாக இளையராஜாவும் இருந்தார். இருவரும் சம புள்ளிகளை பெற்றிருந்தார்கள். அப்போது தேசி விருது பரிந்துரை குழுவில் உறுப்பினராக பாலுமகேந்திரா இருந்தார். அவருக்கு 2 ஓட்டுக்கள். எனவே, அவர் யாருக்கு போடுகிறாரோ அவருக்கே விருது.
இதையும் படிங்க: 3 படம் ஹிட் கொடுத்தேன்.. ஆனாலும் சரண் அப்படி செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பரத்வாஜ்!..
இளையராஜா மீது தீவிர அன்பும், மரியாதையும் கொண்டவர் பாலுமகேந்திரா. ஆனாலும், அவர் வாக்களித்தது ரஹ்மானுக்கு. அதற்கு அவர் சொன்ன காரணம் ‘ ஒரு சின்ன பையன் ராஜாவுக்கு சரி சமமாக வந்து நிற்கிறான். முதல் படமே தேசிய விருது என்பது எல்லோருக்கும் அமையாது. அவன் வளர வேண்டும் அதனால்தான் அவனுக்கு ஓட்டு போட்டேன். வாக்களித்துவிட்டு இதை ராஜாவிடம் சொன்னேன். ‘நீங்கள் செய்தது நூறு சதவீதம் சரி’ என மகிழ்ச்சியுடன் ராஜா கூறினார்’ என பாலுமகேந்திரா சொல்லி இருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றபோது நடந்த விழாவிலும் இளையராஜா கலந்து கொண்டு அவரை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.